Followers

Friday, December 1, 2017

ஆறாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது திருமணம் சம்பந்தப்பட்டது என்று சொல்லுவார்கள். இளம் வயதில் காதல் செய்வதற்க்கும் திருமணம் முடிந்தபிறகும் அந்த திருமணம் சரியாக செல்வதற்க்கும் சுக்கிரன் மிக மிக முக்கியமான கிரகம். 

சுக்கிரன் ஆறாவது வீட்டில் இருந்தால் ஏழாம் வீட்டிற்க்கு விரையவீடு என்று வரும். காதலிலும் சரி திருமணத்திலும் சரி நிறைய சுதப்ப வைத்துவிடும். நிறைய சண்டைச்சச்சரவுகளுக்கு வழி வகுத்துவிடும். ஆறாவது வீட்டை பொறுத்து சண்டை காவல் நிலையம் வரை செல்ல வைத்துவிடும்.

மறைவு ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது நல்லது என்றும் ஒரு சிலர் சொல்லுவார்கள். அது எல்லா மறைவுஸ்தானத்திற்க்கும் ஒத்துவராது.  ஆறாவது வீடு என்பது வம்பு வழக்கு அல்லது நோயை காட்டக்கூடிய ஒரு இடம் என்பதால் நிறைய பிரச்சினைகளை தரும்.

சுக்கிரன் ஆறில் நிற்க்கும்பொழுது வரும் துணைக்கு அதிக மருத்துவ செலவு செய்ய வைத்துவிடும். அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்று வருவது போல இருக்கும். மருத்துவமனைக்கே மாதத்தில் ஒரு தொகை ஒதுக்க வேண்டிய நிலை இருக்கும்.

சுக்கிரன் ஆறில் நின்றால் நீங்கள் பெண்கள் விசயத்தில் அதிகம் தலையீடு செய்யகூடாது. பெண்கள் என்ன தான் உங்களை பேசினாலும் வாய் திறந்து எதுவும் சொல்லிவிடகூடாது. நீங்கள் இப்படி இருந்தால் உங்களுக்கு நல்லது. உங்களின் எதிரியே பெண்கள் தான் என்பதால் நிதானமாக இருங்கள்.

மேலே சொன்ன பலன் எல்லாம் பொதுவான பலன். ஒவ்வொரு லக்கினத்திற்க்கும் தகுந்தமாதிரி பலன்கள் மாறுபடும். ஒரு சிலருக்கு நல்ல பலன்களும் நடக்கின்றது.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். பத்தாம் தேதிக்குள் அம்மன் பூஜை நடத்தப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: