வணக்கம்!
ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தால் அந்த நாட்டில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்படாது. நம்ம இந்தியாவில் அன்னதானம் மிகப்பெரிய தர்மம் என்று சொல்லுகின்றனர். நம்ம ஆளுங்க அதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
அன்னதானம் செய்தால் ஒரு இடத்தில் அனைவரும் அதனை சாப்பிடவேண்டும் என்று தேடி செல்கின்றனர். அன்னதானம் செய்தால் அதனை சாப்பிடவேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது என்றால் நம்மிடம் போதிய ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாட்டை ஒருவரும் சாப்பிடவில்லை என்று தோன்றுகிறது.
நாம் சாப்பிட்டு சாப்பிட்டு சளித்துவிட்டால் அதனை நோக்கி அவ்வளவு எளிதில் நாம் சென்றுவிடமாட்டோம். நம்முடைய உடல் போதிய சாப்பாட்டை சாப்பிடவில்லை என்று தான் அர்த்தம். சாப்பிடவேண்டும் என்றால் தான் நாம் அன்னதானத்திற்க்கே செல்வோம்.
நாம் இன்னமும் முன்னேற்றம் அடையவில்லையே என்று தான் தோன்றுகிறது. நாம் அனைவரும் நல்ல ஊட்டசத்தை நிறைந்த உணவை சாப்பிட்டால் நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று சொல்லலாம்.
ஒவ்வொருவரும் நல்ல ஊட்டசத்து நிறைந்த உணவை சாப்பிட்டால் அதுவாகவே சுக்கிரன் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். சுக்கிரன் ஆற்றல் வந்துவிட்டால் நம்மிடம் நிறைய பணம் வரும். அனைத்து செல்வமும் கிடைத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment