வணக்கம்!
தங்களின் கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்றால் கூட அவர்களுக்கு கர்மா பிடிக்கும் என்பது பலரின் வாழ்வை நான் பார்த்ததில் இருந்து தெரியவந்தது. அதுவும் அரசாங்க ஊழியர்களின் வாழ்விலும் இது நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.
ஒரு அரசாங்க ஊழியர்களை பாருங்கள். அவர்கள் செய்யவேண்டிய வேலையை செய்வதை இழுத்து அடித்து செய்வார்கள். இன்று நடப்பதை பல வாரத்திற்க்கு இழுத்து அடிப்பார்கள். இவர்கள் இன்று சம்பாதிப்பது போல தெரியும் ஆனால் அவர்களின் வாரிசுகள் எல்லாம் வீணாக போய்விடுவார்கள்.
அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தை பார்த்தால் அதில் பெரிய ஓட்டை இருப்பது தெரியும். ஏதோ ஒரு விசயத்தில் பெரிய அடி அவர்களின் குடும்பத்தில் இருக்கும். இவர்கள் லஞ்சம் வாங்குவதால் நடப்பது இல்லை அவர்கள் செய்யவேண்டிய வேலையை அவர்கள் செய்யாமல் இருப்பதால் வருவது.
அரசாங்க வேலையில் மட்டும் இல்லை நாம் செய்யும் தனியார் வேலையில் கூட அந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்றால் நமக்கு கர்மா என்பது பிடிக்கும். நீங்கள் சம்பளமே வாங்காமல் வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் கூட அந்த வேலையை செய்வதில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஒரு நாள் நல்லது நடக்கும்.
சோதிடத்தில் உள்ள கிரகங்களில் உள்ள கர்மாவை நாம் சொல்லிவிடலாம் ஆனால் நடப்பில் உள்ள வாழ்க்கையில் உள்ள கர்மா தெரியாது அதற்கு தான் இந்த பதிவை தந்து செயல்பட சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment