வணக்கம்!
சுக்கிரன் கிரகம் ஒருவருக்கு சரியில்லை என்றால் அவர் காதலில் தோல்வியை சந்திப்பார் என்று சொல்லுவார்கள். சுக்கிரன் நன்றாக அமைந்த நபர்களுக்கும் காதல் தோல்வியை சந்திப்பார்கள். இது அவர்களுக்கு நடக்கும் கோச்சாரபலன் மற்றும் தசா பலனை பொறுத்து அமையும்.
பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கின்றது அதனால் காதல் திருமணம் தான் புரிவார் என்று சொல்லமுடியாது. திருமண வயதில் அவர்க்கு நடைபெறும் தசா மற்றும் கோச்சாரபலன் அதனை முடிவு செய்யும்.
ஒருவர் காதலில் தோல்வியை தழுவது அவர்களுக்கு பிற கிரகங்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்பொழுது அவர்களின் மனநிலை சரியில்லாமல் செய்துவிடும். சண்டை போட்டுக்கொண்டு பிரிவார்கள்.
சுக்கிரன் அந்த நேரத்தில் பலவீனமாக சென்றுக்கொண்டு இருந்தால் நிலைமை அதிக மோசமாக போய்விடும். சுக்கிரன் செல்லும் வீட்டிற்க்கு தகுந்தமாதிரி அவர்களின் பிரிவும் இருக்கும். எந்த காரணத்தால் பிரிவு ஏற்படுகிறது என்பது சுக்கிரன் செல்லும் வீட்டை வைத்து தான் சொல்லமுடியும். காதல் செய்கின்றீர்கள் என்றால் உடனே திருமணம் செய்வது நல்லது.
இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள் வைக்கலாம். நவஅம்மன் யாகம் நடந்துக்கொண்டு இருக்கின்றது.
பொதுநவஅம்மன் யாகத்திற்க்கு அறிவிப்பு வரும் அனைவரும் அதில் கலந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment