வணக்கம்!
பல ஊர்களுக்கு சென்று வந்த அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். ஒரு சில ஊர்களில் திருமணம் நடைபெறும் மண்டபம் மிக சிறிய அளவில் கட்டி வைத்திருப்பார்கள். அதில் திருமணத்தை நடத்தும்பொழுது மண்டபத்தில் முழுவதும் பெண்கள் அமர்ந்துக்கொண்டு ஆண்கள் எல்லாம் வெளியில் நிற்பது போல இருக்கும்.
ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த திருமணத்தின் பொழுது மணமக்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்த்தவேண்டும் அப்படி வாழ்த்தினால் அந்த திருமண தம்பதிகள் நன்றாக வாழ்வார்கள். தனித்தனியாக வாழ்த்த கூடாது.
பல ஊர்களில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். அவர் அவர்களின் வசதிகேற்ப இதனை வைத்தாலும் இதனை தவிர்த்துவிட்டு கோவிலில் கூட திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம். சிறிய மண்டபங்களை தவிர்த்துவிடுவது நல்லது.
திருமணம் என்றாலே மண்டபத்தில் நடத்துவதை விட கோவிலில் நடத்துவது தான் நல்லது. உங்களின் வசதிகேற்ப சிறிய கோவிலில் கூட இதனை நடத்திக்கொள்ளலாம். கோவிலாக இருந்தால் அது உங்களுக்கு உள்ள தோஷத்தை கூட போக்கிவிடும்.
இருவர் இல்லறவாழ்வில் நுழையும்பொழுது இருவராக இருந்து வாழ்த்தவேண்டும். சிறிய மண்டபத்தில் திருமணத்தை நடத்தினால் அங்கு பெண்கள் மட்டும் அமர்ந்து இருந்தால் அது வேறு மாதிரியாக தெரியும். பெண்கள் மட்டும் இருந்தால் அது இறப்பு நிகழ்ச்சி போல இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment