Followers

Friday, May 4, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          எளிமையாக இருந்தால் கிரகங்கள் பாதிக்காதா என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். எளிமையாக இருந்தால் கிரகங்கள் பாதிக்குதோ இல்லையோ மனிதர்களின் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

மனிதர்களின் பார்வை கண்அடியாக விழுகின்றது அல்லவா அந்த கண்அடியில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள ஒரு வழியை தான் எளிமை போதிக்கின்றது. ஒரு சில கிரகங்கள் பகடாக வாழ்பவர்களை அதிகமாக தாக்குகின்றது. அதனால் எளிமையாக இருக்கலாம்.

கிரகங்களின் தாக்குதல் நடத்தும்பொழுது உங்களின் ஆடம்பரமான வாழ்க்கையை தான் முதலில் தகர்க்கும். ஒருவர் மிகுந்த ஆடம்பரமாக வாழ்பவர்கள் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு அதுவே பெரிய பேரடியாக இருக்கும். 

சாதாரணமானவர்களுக்கு கிரகங்கள் அதிகம் தாக்கும் தான் ஆனால் பெரிய பாதிப்பை கொடுத்துவிடுவது இல்லை. ஒரு சில அவமானங்களை தரும் அதுவும் கடந்துபோய்விடும். ஒரு சில நாட்களில் அனைத்தும் மாறிவிடும்.

சாதாரணமானவர்களாக இருந்து பழகிவிட்டால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அதனால் எளிமையாக இருங்கள் என்று சொல்லுவது உண்டு. எளிமையாக இருந்து வழிபாட்டை மேற்க்கொண்டால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: