வணக்கம்!
நாம் என்ன தான் சொன்னாலும் பலர் அதனைப்பற்றி கேட்கவே மாட்டார்கள் என்று சொல்லலாம். ஒரு கெடுதலை தரப்போகின்றது என்று நாம் சொல்லுவோம். உதாரணத்திற்க்கு ராகு தசா உங்களுக்கு கெடுதலை தரும் என்று பதிவில் சொல்லுவோம்.
நமது ஜாதககதம்பத்தில் ராகு தசா குறைந்தது நூறு பேர்க்கு மேல் நடக்கும். இதில் கேட்பவர்கள் ஒருவர் வந்தாலே அது பெரிய விசயமாக தான் இருக்கும். ராகு தசா மட்டும் இல்லை எந்த தசாவாக இருந்தாலும் அதில் நிறைய பேர் படிப்பார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்பதை கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
இது எதனால் என்றால் இவர்கள் சிக்கி இருப்பது தீயகிரகங்களின் கையில் சிக்கி இருக்கின்றனர் என்று அர்த்தம். இராகு தசா சனி தசா சுக்கிர தசா போன்ற தசாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்கள் சொல்லுவதை அவ்வளவு எளிதாக கேட்கமாட்டார்கள்.
மேலே சொன்ன தசாக்கள் ஒரு நபரின் புத்தியை அதிகமாக கெடுத்துவிடும் தன்மை படைத்த கிரகங்கள். அடுத்தவர்கள் என்ன சொல்லுவது நாம் என்ன கேட்பது என்ற நினைப்பில் இருப்பார்கள். அறிவுரை கேட்டால் அவன் திருந்திவிடுவான் என்று இந்த கிரகங்கள் முடிவு எடுத்து தான் வேலை செய்கின்றன.
நமது வேலை சொல்லிக்கொண்டே இருப்பது என்பதற்க்காக சொல்லிக்கொண்டே இருப்போம். சுபக்கிரகங்கள் தசா பெரும்பாலும் அடுத்தவர் சொல்லும் அறிவுரை கேட்டு அதற்கு தகுந்தார் போல் நடக்க வைக்கும்.
தீயகிரகங்களுக்கு என்று தான் அதிகமான ஒரு காலக்கட்டத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள். ஒருத்தனை போட்டு கொல்லாமல் கொல்லவேண்டும் என்பதற்க்காக இப்படி வைத்திருக்கின்றார்களாக என்பது தெரியவில்லை ஆனால் இதற்க்கு அதிக காலக்கட்டத்தை கொடுத்து இருக்கின்றனர். இதில் ஒருவர் மாட்டினால் அவரை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகின்றன.
என்னை பொருத்தவரை முடிந்தவரை அடுத்தவர்களின் அறிவுரையை கேட்டு நடக்க பாருங்கள். அது என்னிடம் தான் கேட்கவேண்டும் என்பதில்லை உங்களுக்கு யார் நல்லதை கொடுப்பார்கள் என்பதை அறிந்துக்கொண்டு அவர்கள் சொல்லுவதை கேட்டு நடந்தால் வாழ்க்கை எளிமையாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment