வணக்கம்!
நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது ஒன்றைச்சொல்லுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு ஜவுளிக்கடையை பெயரைச்சொல்லி அவர்கள் இப்படிப்பட்ட பூஜை செய்து தான் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றார்கள் என்று சொல்லுவார்கள். அதாவது ஜாதகம் பார்க்க வரும் நபர்களே அப்படி சொல்லிருக்கின்றனர்.
ஜவுளிக்கடையின் பெயரைச்சொல்லி பல சோதிடர்களும் காலம் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். அந்த ஜவுளிக்கடைக்கு நான் தான் மோதிரம் செய்துக்கொடுத்தேன். நான் தான் பூஜை செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டும் இருக்கின்றனர்.
நீங்களே இதனை கவனித்து பார்த்தால் இந்த தகவலை சோதிடர்கள் சொல்லுவார்கள். ஒரு ஊரில் உள்ள பத்து சோதிடர்களிடம் சென்றால் எட்டு பேர் இந்த தகவலை சொல்லிவிடுவார்கள். ஊரு முழுவதும் தேடினால் எத்தனை பேர் சொல்லுவார்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு சோதிடர் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள இப்படி பொய் சொல்லுவது உண்டு. ஜவுளிக்கடை முன்னேற்றம் காண்பதற்க்கு அவர்கள் என்ன செய்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. வேறு மாதிரியும் சொல்லுவார்கள். அவர்கள் கேரளாவில் இதற்க்கு என்று ஆட்களை வைத்து செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்பார்கள். கேரளா போய் பார்த்தால் தான் தெரியும் அங்கு இருப்பவர்கள் எவ்வளவு பெரிய டூபாக்கூர் என்பது புரியும்.
என்னை தேடி பல கம்பெனிகள் வந்திருக்கின்றன. அதனை எல்லாம் செய்வதை விட ஒரு சாதாரணமான நபர்களுக்கு நாம் சோதிடம் பார்த்து அவர்களை முன்னேற்றம் செய்வதில் தான் அதிகமான ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்தில் பார்த்தால் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே செய்துக்கொண்டு இருந்தேன்.
இறைவன் கொடுத்த ஒரு அற்புதகலையை எளிய மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பது ஒரு காலத்திற்க்கு பிறகு முடிவு செய்து அதனை செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் சோதிடர்களாக வர வாய்ப்பு இருந்தால் எளிய மனிதர்களுக்கு பாருங்கள். எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை விட எத்தனை ஆத்மாக்களுக்கு வழிகாட்டினோம் என்பதில் தான் நமது திறமை இருக்கும். அது தான் புண்ணியமும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment