Followers

Sunday, May 6, 2018

பூஜையறையில் விளக்கு ஏற்றுவது எப்படி?


ணக்கம்!
          பூஜையறையில் விளக்கு ஏற்றும் முறையை பற்றி நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். விளக்கு பூஜையறையில் ஏற்றும்பொழுது அந்த விளக்கு கிழக்குநோக்கி எரியவேண்டும். இது ஆதிகாலத்தில் இருந்து கடைபிடித்து வரும் மரபு.

பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து நீங்கள் பிராத்தனை அல்லது வழிபாடு செய்வது போல இருந்தால் நீங்கள் வடக்கு நோக்கி கும்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும். வடக்கில் இருந்து உள்ள தெய்வம் உங்களை பார்க்கவேண்டும் என்பார்கள்.

வடக்கில் உள்ள தெய்வம் அதிர்ஷ்ட தெய்வம் என்பதால் அது உங்களை பார்த்தால் அது நல்லது என்பார்கள். ஒவ்வொரு பூஜையறைக்கும் மாறுபடும் என்று வாஸ்துவில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். வாஸ்துவைப்பற்றி முழுமையான தகவல் எனக்கு தெரியாது. கால காலமாக செய்து வரும் நம்பிக்கையை வைத்து நான் சொல்லுகிறேன்.

பூஜையறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து தான் வணங்கி வருவார்கள். ஏதாவது விஷேச பூஜை செய்யும்பொழுது மட்டும் குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளிக்கிழமையில் குத்துவிளக்கை ஏற்றி பூஜை செய்வார்கள்.

விளக்குக்கு போடும் எண்ணெய் பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். தற்பொழுது கடைகளில் கூட்டு எண்ணெய் வாங்கி பயன்படுத்துகின்றார்கள் அதனை பயன்படுத்தகூடாது. நல்லெண்ணெய் வாங்கி பயன்படுத்துங்கள்.

மேலே சொன்ன தகவல் ஆதிகாலத்தில் இருந்த கடைபிடித்து வரும் ஒரு மரபு. புதியதாக உங்களுக்கு தகவல் கிடைத்தால் அதனையும் பின்பற்றிவரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: