வணக்கம்!
இன்று சுபமுகூர்த்த நாள். நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. மலமாதத்தை எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நிறைய வீடு குடிபுகுதல் மற்றும் திருமணங்கள் நடைபெறுகின்றன.
திருவாதிரை நட்சத்திரத்தை உடையவர்களுக்கு என்று உள்ள ஒரு அமைப்பைப்பற்றி பார்க்கலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் என்பது அவ்வளவு எளிதில் நடைபெறுவதில்ல. திருமணத்திற்க்கு என்று நிறைய போராட்டங்களை அவர்கள் செய்யவேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் உடையவர்கள் பெரும்பாலும் திருமணத்தில் அவர்களின் வீட்டை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்வது போல அதிகப்பட்சம் நடைபெறும். திருமணத்திற்க்கு ஒரு பெண்ணை பார்த்தால் அந்த பெண் வீட்டுக்காரர்கள் பிரச்சினையை கொடுப்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தை உடையவர்கள் முடிந்தவரை திருமணத்தை கந்தர்வமணம் முடிக்க பாருங்கள். திருமணம் உங்களின் ஜாதியில் இருந்து பிற ஜாதியில் திருமண வரம் அமையும். ஒரே ஜாதியில் அமைவது பெரிய கடினமாகவே இருக்கும்.
ஒரே ஜாதியில் திருமண ஏற்பாடு நடந்தால் திருமணத்திற்க்கு கூட்டம் கூட்டாமல் பத்து பேர்க்குள் திருமணத்தை கோவிலில் நடத்திக்கொள்ளுங்கள். வரவேற்பை பெரியளவில் செய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment