Followers

Thursday, May 17, 2018

சாய்பாபா


வணக்கம்!
          நமது மக்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையையும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கின்றன. இது ஒரு நல்ல விசயம் தானே என்று சொல்லலாம். நான் கூட சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன். தற்பொழுது எல்லாம் சாய்பாபா கோவிலுக்கு செல்வதில்லை.

குரு என்ற ஒரு காரணத்திற்க்காக சாய்பாபா வணங்கினாலும் அதற்கு பின்னால் மிகப்பெரிய வணிகம் இருக்கின்றது. இதனை அவர்களுக்கு எதிராக நான் சொல்லவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை. அதனை விட நமது பழைமையான கோவில்களில் மிகப்பெரிய சக்தி இருக்கின்றது.

பழைமையான கோவில்களில் இருக்கும் சக்தி என்பது புதிய கோவில்களில் குறைவாக தான் இருக்கும். பழைமையான கோவில்கள் என்றால் கோடிக்கானக்கான மக்கள் அங்கு தரிசனம் செய்து இருப்பார்கள் அதில் நல்ல ஆத்மாக்களும் வழிபட்டு இருக்கும் அவர்களின் தரிசனமும் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய கோவில்களில் சக்தி இல்லை என்று சொல்லவரவில்லை. அது மடம் போல நிறைய இடத்தில் திறந்து வைக்கின்றனர் அல்லவா. இது ஒரு பஜனை மடம் போல தான் இருக்கும். கிருஸ்துவர்கள் கூட்டம் கூட்டுவார்கள் அல்லவா. அது போல ஒரு ஒரு இடமாக தான் இருக்கும். 

நீங்கள் இதற்கு செல்லவேண்டாம் என்பதற்காக இதனை சொல்லவில்லை. நமது பழமையான கோவில்களுக்கு நீங்கள் சென்றால் மிகப்பெரிய ஒரு ஆன்மீக அனுபவத்தை பெறலாம் என்பதற்க்காக சொல்லுகிறேன். இனி உங்களின் முடிவு.

சாய்பாபாவை வணங்கவேண்டாம் என்று சொல்லவில்லை. அவரையும் வணங்குங்கள் அதனோடு நின்றுவிடாமல் கொஞ்சம் நமது பழைமையான கோவில்களையும் வணங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: