வணக்கம்!
ஒரு நாளில் அன்றைய நட்சத்திரம் என்ன என்று பார்க்கவேண்டும். நட்சத்திரத்தின் அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். நட்சத்திர அதிபதி யாரோடு கோச்சாரபலன்களில் சென்றுக்கொண்டு இருக்கின்றார் என்று பார்க்கவேண்டும் இதனை அறிந்து அந்த நாளை நாம் முடிவு செய்யவேண்டும்.
நேற்று மகம் நட்சத்திரம். மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. தற்சமயம் கேது பகவான் மகரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றார். மகரத்தில் கேது பகவான் செவ்வாய் கிரகத்தோடு சேர்ந்து சென்றுக்கொண்டு இருக்கின்றார்.
மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சென்றுக்கொண்டு இருக்கின்றார். மகரத்திற்க்கு சந்திராஷ்டமம். மகரராசிக்கு சந்திராஷ்டம் என்றால் கணவன் மனைவிக்குள் நல்ல சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கும். இரண்டு பேருக்கும் சண்டை உருவாகி அது பெரியளவில் வந்திருக்கும். எந்த வித நல்ல காரியமும் செய்யகூடாது.
ஒரு நாளில் உள்ள நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி. அந்த அதிபதி எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றார் என்பதை பொறுத்து பலன்களை பார்க்கலாம். அதோடு சந்திராஷ்டமம் யாருக்கு அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நடக்க ஆரம்பிக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் இதனை பார்த்து நடக்கவேண்டும். அதோடு அன்றைய திதியையும் கணக்கில் கொண்டு நாம் செயலாற்றினால் பெரியளவில் எச்சரிக்கையோடு செயல்படலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment