Followers

Sunday, September 2, 2012

மேஷம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்கபோவது மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலனை தரும் என்று பார்க்க போகிறோம்.

பொதுவாக தசா பலன் சொல்லும் போது எந்த நட்சத்திரத்தில் ஏழாம் வீட்டு அதிபர் செல்கிறார் என்பதை கவனித்து சொல்லவேண்டும். இப்பொழுது தான் நமது பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை உங்களால் அதிகரித்து இருக்கிறது அவர்களுக்கு புரியாது. கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு அனைத்தையும் பெரிய அளவில் பார்க்கலாம். அப்பொழுது உங்களுக்கு சோதிடத்தின் பிரமாண்டம் தெரியும். இப்பொழுது இது போதும்.

ஏழாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு ஏழாவது வீடு துலாம் ராசியாக வருகிறது அதன் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மேஷத்தில் சமன் தான்.

நல்ல கவர்ச்சியை கொண்டவனாகவும் துணைவர் இடத்தில் நல்ல அன்பு வைத்து பழகுதல் பேசுதல் காமத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாட்டு இருப்பார். இவர் துணைவரை இவரே தேர்ந்தெடுக்குகொள்வார். இவர் துணைவரை இவரே தேர்ந்தெடுத்துக்கொள்வார். பகைவரையும் நண்பராக்குவார். திடீர் பணக்காரர் ஆவார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு இரண்டாவது வீடு ரிஷபம். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் சொந்த வீட்டில் அமருகிறார்.

நல்ல யோகத்தை தருவார்.துணைவர் மூலம் சொத்துக்கள் சேரும். தனபாக்கியம் கிடைக்கும். வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் கூடுவார்கள். அரசியலில் ஈடுபட்டு அதனால் நல்ல பெயர் பெறுவார் இப்பொழுது யார் பெயர் எடுக்கிறார்கள் நல்ல சம்பாதிப்பார் என்று வைத்துக்கொள்ளவேண்டியது தான். துணைவர் உறவினர்கள் மூலம் வருமானம் வரும். தொழில் கூட்டாளிகள் மூலம் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு மூன்றாவது வீடு மிதுனம். இது சுக்கிரனுக்கு நட்பு வீடு.

துணைவர் வந்ததால் யோகம் வந்ததா அல்லது யோகம் வந்ததால் துணைவர் வந்தார என்று நினைக்க தோன்றும். குடும்ப வாழ்க்கைக்கு நல்ல ஒத்துழைப்பார். எதையும் பொறுமையுடன் அணுகுவார். ஏஜென்சி தொழில் நல்ல லாபம் தரும்.

ஏழாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு நான்காவது வீடாக கடக ராசி வருகிறது. இது சுக்கிரனின் பகை வீடு.

நான்காவது வீட்டில் சுக்கிரன் சம்பந்தப்பட்டு தசா நடக்கிறது அதனால் நல்ல வாகன யோகம் அமையும் என்று சொல்லலாம் ஆனால் பகை வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடப்பதால் வாகனங்கள் பிரச்சினையை சந்திக்கும் என்று சொல்ல வேண்டும்.

வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும். இது செவ்வாய்க்கு நீச வீடு அதனால் தங்கி இருக்கும் வீடும் பிரச்சினையை சந்திக்கும். துணைவியாரல் பிரச்சினை ஏற்படும். கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீரால் பிரச்சினையை சந்திக்க வேண்டும். திருமணமும் பல தடைகளுக்கு பிறகு நடைபெறும். 

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு ஐந்தாவது வீடாக சிம்ம ராசி வருகிறது. சுக்கிரனுக்கு இது பகைவீடு.

இது களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.  பெண்கள் மூலம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். காதல் திருமணத்திற்க்கு வழி ஏற்படும். பொதுவாக இந்த தசாவில் கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பதில்லை இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். பணம் நன்றாக வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது கன்னி ராசி. சுக்கிரன் கன்னியில் நீசமாகிறார்.

ஏழாவது வீட்டிற்க்கு இது பனிரெண்டாவது வீடாக வருகிறது திருமண உறவில் பிரிவை சந்திக்க வேண்டிவரும். துணைவியே உங்களுக்கு எதிரியாக உருவாகிவிடுவார். துணைவருக்கு நோய் வரும். கூட்டு தொழிலும் அந்தளவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இருக்காது.

ஏழாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டிலேயே சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு ஏழாவது வீடாக துலாம் ராசி வருகிறது அதன் அதிபதி சுக்கிரன்.

சொந்த வீட்டிலேயே இருப்பதால் நல்ல குடும்பம் அமையும். துணைவர் செவ்வாக்கு அதிகமாக இருக்கும். இவர் துணைவருக்கு அடிமையாக இருப்பார். இவர் துணைவரே  கூட்டு தொழிலுக்கு பார்ட்னர்ராக இருப்பார்.

ஏழாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது விருச்சிகம். சுக்கிரனுக்கு சமம்.

திருமண வாழ்க்கை தாமதம் ஏற்படும். நல்ல பணவசதி ஏற்படும். தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்காது. திருமண வாழ்க்கையில் அவமானத்தை சந்திக்க வேண்டிவரும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்கு ஒன்பதாவது வீடாக வருவது தனசு ராசி இது சுக்கிரனுக்கு நட்பு வீடு.

துணைவர் மூலம் சொத்துக்கள் வரும். பெரியோர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். பாக்கிய வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடப்பதால் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். திருமண வாழ்வில் ஒற்றுமை ஏற்படும்.

ஏழாம் வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு பத்தாவது வீடாக மகர ராசி வருகிறது. சுக்கிரனுக்கு இது நட்பு வீடு

இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றால் இந்த தசாவில் திருமணம் நடைபெறும். தொழிலில் இருப்பவரே துணையாக வருவார் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மூலம் திருமணம் நடைபெறும். திருமணத்தால் உங்களுக்கு நல்ல தொழில் செய்ய வாய்ப்பு உருவாகும். உங்கள் குடும்பத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை பெற்று இருப்பார்.

ஏழாம் வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு பதினோராவது வீடாக கும்பராசி வருகிறது. இது சுக்கிரனின் நட்பு வீடு.

இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் நடைபெறும். அன்பான துணைவர் கிடைப்பார். நண்பர்கள் மூலம் திருமண வாழ்க்கை அமையும். மூத்த சகோதர்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும். கூட்டு தொழில் லாபம் தரும்.

ஏழாம் வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டிற்க்கு சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷத்திற்க்கு பனிரெண்டாம் வீடாக வருவது மீன ராசி சுக்கிரனுக்கு இது உச்ச வீடு

துணைவியார் உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டி இருக்கும். போட்டிகளில் வெற்றி பெறலாம். காமத்தில் மனது அதிக ஈடுபாடு காட்டும்.எதுவும் எளிதில் நிறைவேறாது அதனால் மனதில் சோர்வு ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: