Followers

Saturday, September 8, 2012

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்




விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயகர் சதுர்த்தி முன்பே அவரை வணங்குவது எப்படி என்று தெரிந்துவிட்டால் உங்களுக்கு எளிதாக இருக்கும் அதற்க்காக இந்த பதிவு

குளக்கரையிலும் மரத்தடியிலும் விநாயகரை அதிகம் காணலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சில பிள்ளையாரையும் அவரை எப்படி தரிசித்தால் சிறந்த பலன்கள் பெறலாம் என்பதையும் இங்கே காண்போம்.

வன்னிமர பிள்ளையார் : இவர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். அதிலும் வடக்கு திசை நோக்கி அருள் பாலித்தால் இன்னும் விசேஷம். அவிட்டம் நட்சத்திரம் அன்று இவரை நெல் பொரியால் அர்சித்து அபிஷேகம் செய்து வழிபடுவதோடு கன்னிப் பெண்களுக்கு தானம் கொடுத்தால் திருமணம் ஆகாதவரகளுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும்.

வில்வமர பிள்ளையார் : இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு சித்திரை நட்சத்திரம் அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இந்த விநாயகரை வலம் வந்தால் பிரிந்த கணவன் மனைவியர் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் இதே விநாயகருக்கு வியாழன் புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

அரசமர பிள்ளையார் :  இவர் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்தால் பயிர் விளைச்சல் பெருகும் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும் பணக்கஷடம் தீரும்.

ஆலமர பிள்ளையார் :  இவர் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு மகம் நட்சத்திரம் அன்று இவருக்கு 5 வகை சித்திரான்கள் படைத்து தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

வேப்பமர பிள்ளையார் : இவர் கிழக்கு நோக்கி இருப்பது விசேஷம் உத்திராட்டதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய்,விளக்கெண்ணெய், பசுநெய் ஆகிய 5 வித எண்ணெய் தீபமான "பஞ்சதீபம்" ஏற்றி வழிபட மனத்திற்க்கு பிடித்த வரன் அமையும், அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்புரியும் நிலை அகலும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: