Followers

Monday, September 3, 2012

ரிஷபம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் ரிஷப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்க போகிறோம்.

ஏழாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு ஏழாவது வீடாக விருச்சிக ராசி வருகிறது அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் ரிஷபத்திற்க்கு சமன்.

இவர் துணையை இவரே தேர்ந்தெடுப்பார். பாவ காரியங்கள் என்று பார்க்காமல் எந்த விசயத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களிடத்தில் தொடர்பு அதிகரிக்கும். தொழில் விசயத்திலும் அக்கறை இல்லாமல் நடந்துகொள்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு இரண்டாவது வீடு மிதுனம் அதன் அதிபதி புதன். செவ்வாய்க்கு இது பகை வீடாக வருகிறது.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தோன்றும். கையில் இருக்கும் காசும் கறையும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அடிப்படும். துணைவரிடம் உள்ள பணத்தை உங்களுக்கு கொடுப்பார்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது கடக ராசி. செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்.

களத்திர தோஷம் ஏற்பட்டு மறுவிவாகம் செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம். சண்டையால் பஞ்சாயத்துக்கு அலைந்துகொண்டு இருக்க வேண்டும். உங்களின் சகோதர்களால் உங்கள் திருமணவாழ்வில் பிரச்சினை ஏற்படலாம். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷப ராசிக்கு நான்காவது வீடாக சிம்ம ராசி வருகிறது. செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு வீடு.

துணைவர் மூலம் எதிர்பார்க்கும் இன்பத்தை அடையலாம். துணைவர் உங்களின் குடும்பபொறுப்பை ஏற்று நடத்துவார். வாகனங்கள் மூலம் வருமானத்தை பெறலாம்.உங்கள் குடும்பம் நல்ல முறையில் வளர்ச்சியில் செல்லும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி செவ்வாய்க்கு இந்த வீடு பகை

திருமணம் முடியாமல் இருந்தால் காதலால் பிரச்சினை ஏற்படும். திருமணம் முடிந்தவர்களுக்கு தன் துணையால் பிரச்சினை ஏற்படும். தொழில் கூட்டாளிகள் உங்கள் பணத்தை  ஏமாற்றவும் செய்வார்கள். விபத்து ஏற்படவும் செய்யும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு ஆறாவது வீடாக துலாம் ராசி வருகிறது செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

துணைவர் உங்களிடம் சண்டை போடுவார். துணைவரே எதிரியாக வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் துணைவரிடம் சண்டை போடாமல் இருப்பது நன்மை பயக்கும். கூட்டு வியாபாரத்திலும் நன்மை ஏற்படாது. உங்களின் துணைவர் நோய்களால் அவதிப்படலாம். விட்டு விட்டு செல்லும் பயணங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஏழாவது வீட்டு் அதிபதி ஏழாவது வீட்டில் இருந்து தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது விருச்சிகம். செவ்வாய் சொந்தவீட்டிலேயே அமருகிறார்.

களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்தும். துணைவரின் செல்வாக்கு அதிகரிக்கும். இவர் அவரிடம் அடிமையாக இருக்க வேண்டிவரும். கூட்டுதொழிலில் சண்டை ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் யோகம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் இருந்து தசா நடந்தால் ரிஷபராசிக்கு எட்டாவது வீடாக தனுசு ராசி வருகிறது செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு வீடு

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வரும் துணையால் உங்களுக்கு அவமானம் ஏற்படும். அந்த காலத்தில் பல தோல்விகளை சந்திக்க வேண்டும். குடும்பத்தை நடத்தும் தகுதி அற்றவளாக இருப்பாள்.

ஏழாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சம்பந்தப்பட்ட தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு ஒன்பதாவது வீடாக மகர ராசி வருகிறது. செவ்வாய்க்கு இந்த வீடு உச்ச வீடு

திருமணம் ஆகாமல் இருந்தால் உங்களுக்கு துணைவராக வருபவர் நல்ல பாக்கியசாலியாக வருவார். உங்கள் துணைவர் மூலம் சொத்துக்கள் வரும். குடும்பம் ஒற்றுமையுடன் வாழ்வீர்கள். குடும்பத்தில நிம்மதி இருக்கும். உங்கள் குடும்பத்திற்க்கு உங்கள் ஊரில் நல்ல மதிப்பு வரும்.

ஏழாம் வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷப ராசிக்கு ஏழாவது வீடு கும்ப ராசி வருகிறது. செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

திருமணம் முடியாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வரும் துணைவரால் தொழில் உங்களுக்கு அமையும்.  சொத்துக்கள் தங்கநகைகள் உங்களுக்கு சேரும். பயண வாய்ப்பு அமையும்.

ஏழாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு பதினொன்றாவது வீடாக மீன ராசி வருகிறது செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு வீடு 

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் நடைபெறும். நல்ல செல்வத்துடன் சொத்துகளுடன் துணைவர் வருவார். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். வரும் துணைவர் அன்பாக உங்களை நடத்துவார். நண்பர்கள் மூலம் வருமானம் இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ரிஷபத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மேஷம் செவ்வாய்க்கு இந்த வீடு சொந்தவீடு

வரும் துணையால் காமத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரும் துணைவர் உங்களுக்கு செலவு வைத்துக்கொண்டே இருப்பார் அல்லது துணைவரின் உடல் பிரச்சினைக்காக மருத்துவனை செலவு வைக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: