வணக்கம் நண்பர்களே தனசு லக்கனத்திற்க்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன என்று பாரக்கலாம்.
தனசு லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன் அவர் லக்னத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தனசு குருவின் வீடு. புதனுக்கு இந்த வீடு சமம்.
திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் துணைவரால் உங்களுக்கு லாபம் இருக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள்.
ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு இரண்டாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி புதனுக்கு இந்த வீடு சமம்.
திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நல்ல தனவரவு இருக்கும். துணைவரால் வருமானம் உயரும்.
ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு மூன்றாவது வீடு கும்பம். அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்.
திருமண ஏற்பாடு ஒரு சில தடைகளுக்கு பிறகு நடைபெறும். திருமண வாழ்வில் சில சண்டைகள் ஏற்படும். பக்கத்துவீட்டுகாரர்களின் தொடர்பு உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். உடல் நிலையில் சோர்வு ஏற்பட செய்யும். துணைவர் துணிச்சலாக இருப்பார்.
ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனசு ராசிக்கு நான்காவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு புதனுக்கு இந்த வீடு நீசம்.
திருமண ஏற்பாடு தாயார் வழியில் நடைபெறும். திருமண காலம் தாழ்த்தி நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் துணைவருக்கும் உங்கள் தாயாரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள்.
ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனசுக்கு ஐந்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.
திருமணம் காதல் திருமணமாக இருக்கும். திருமணம் நடைபெற்றால் திருமண வாழ்வில் சண்டை சச்சரவு இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். அறிவால் வெல்ல முடியும். குலதெய்வ வழிபாடு நீங்களும் உங்கள் துணைவரும் சென்று வழிபட்டு வருவீர்கள்.
ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு ஆறாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். புதனுக்கு நட்பு வீடு.
திருமண ஏற்பாடு தடை ஏற்பட்டு நடைபெறும். உங்கள் வேலைகாரர் மூலம் வரன் வரும். திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்காது. உங்கள் துணைவர் நோய்வாய் படுவார்.
ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு ஏழாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். புதனுக்கு சொந்த வீடு.
திருமண நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். துணைவரர் வந்ததால் மகிழ்ச்சி வந்ததா அல்லது மகிழ்ச்சி வந்ததால் துணைவரர் வந்தாதா என்று நினைக்க தோன்றும். அனைதிலும் நிம்மதியை தரும் இந்த தசா.
ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு எட்டாவது வீடாக வருவது கடக ராசி அத் அதிபதி சந்திரன். புதனுக்கு இந்த வீடு பகை வீடு.
திருமண ஏற்பாடு நடைபெறாது. திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது உங்கள் துணைவர் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார். துணைவரால் குடும்பத்தில் வீண் பிரச்சினை வரும்.
ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசு ராசிக்கு ஒன்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். புதனுக்கு இந்த வீடு நட்பு வீடு.
திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். பெரியோர்களின் ஆசி இருக்கும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு உயரும். திருமண தம்பதிகள் ஆன்மிக பெரியவர்களிடம் ஆசி வாங்குவீர்கள்.
ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு பத்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். புதனுக்கு இந்த வீடு சொந்த வீடு.
திருமண ஏற்பாடு நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மூலம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் துணைவரால் உங்களுக்கு தொழில் அமையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.
திருமண ஏற்பாடு மூத்த சகோதரிகள் மூலம் நடைபெறும். திருமணம் உடனே நடைபெற்றுவிடும். உங்கள் துணைவர் நல்ல சொத்துக்களுடன் வருவார். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். நல்ல லாபம் வரும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள்.
ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் தனுசுக்கு பனிரெண்டாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.
திருமண ஏற்பாட்டில் சண்டை வரும். திருமணம் நடைபெறுவதற்க்கு அதிக செலவு செய்ய வேண்டிவரும். திருமண வாழ்வில் நிம்மதி குறைவாக இருக்கும். துணைவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தங்கவேண்டிவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
நண்பரே எனது கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.உபயராசிக்கு பாதகாதிபதியாக வருவதே இந்த 7ம் அதிபதி தான்(புதன் மற்றும் குரு),சுபக்கிரகங்கள் கேந்திராதிபதியாக வருவதற்கும்,பாவக்கிரகங்கள் கேந்திராதிபதியாக வருவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.சுபக்கிரகங்கள் கேந்திராதிபதியாக வரும்போது கேந்திராதிபத்திய தோஷமும் சேர்ந்தே வரும்,கூடவே பாதகாதிபத்தியம் வேறு.மேலும் அதிபதிகளுக்கு பகை வேறு.அதனால் உபயராசிகளுக்கு 7ம் அதிபதி ஒன்று திரிகோணம் ஏறினால் நல்லது,இல்லையெனில் மறைவு ஸ்தானம் ஏறுவது அதைவிட நல்லது (கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்) என்பது போன்றது. இதில் சொந்தக் கேந்திரமேறினால் தோஷத்திற்கு மாறாக பஞ்சமகா புருஷ யோகங்களில் உள்ள தமது பலத்தைத் தருவர்,அதுவும் நட்சத்திர சாரம் சொதப்பினால் இவர்களும் சொதப்பிவிடுவர்.ஆட்சி பெற்றதும் அர்த்தமில்லாமல் போய்விடும்.மாறாக பகைக் கேந்திரமேறினால் திருமண வாழ்க்கையை உண்டு இல்லையென ஆக்கிவிடுவர்.இது உபயராசிகளுக்கு உள்ள மிகப்பெரிய ஆப்பு.
Rajaram
தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே
Post a Comment