Followers

Monday, September 10, 2012

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்



நெல்லிமர பிள்ளையார் : பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெயை கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும் பெண் குழந்தைக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். மன சாந்தியும் கிடைக்கும்.

மாமர பிள்ளையார் : கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்ட 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும் விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.

நாவல்மர பிள்ளையார் : இவர் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம் ரோகினி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டுவர பிரிந்த தம்பதியினர் குடுங்பங்கள் உறவுகள் ஒன்று சேருவர்.

புன்னைமர பிள்ளையார் : ஆயில்யம் நட்சத்திரம் அன்று இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதோடு ஏழை நோயாளிக்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன் மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும் தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

இலுப்பை மர பிள்ளையார் : ரேவதி நட்சத்திரம் அன்றும் செவ்வாய்கிழமைகளிலும் இவருக்கு பசு நெய்யை கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்கு உட்பட்ட சிறுமியரகளுக்கு அளித்துவர தனித்து வாழும் முதியவர்கள் பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும் மிக உயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் எந்தவித விபத்துக்கள் இன்றி நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

மகிழமர பிள்ளையார் : அரிய விநாயகரான இவரை அனுஷம் நட்சத்திரம் அன்று மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்துவர ராணுவம் வெளிநாடுகளில் உள்ளோர்  நலமாக இருப்பார்கள் ராணுவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான வாழ்வை பெறுவார்கள்.

சந்தனமர பிள்ளையார் : மிக மிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட அரி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும் புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: