Followers

Friday, September 7, 2012

சோதிட அனுபவம்



வணக்கம் நண்பர்களே நமது தளத்திற்க்கு வரும் நண்பர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி நீங்கள் தரும் செய்திகள் படித்த புத்தகங்களில் இருந்ததாக சொல்லியுள்ளீர்கள் அந்த புத்தகத்தின் பெயரை சொல்லி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

நான் படித்த புத்தகங்களின் பெயரை எல்லாம் மறந்துவிட்டேன். நீங்கள் ஒரு இன்ஜீனியாரக வேண்டும் என்று படித்து இருப்பீர்கள் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்று படித்து இருப்பீர்கள் அப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்தையும் விபரங்களையும் ஒரு புத்தகம் கூட விடாமல் தேடி படித்து இருப்பீர்கள்.

அதுபோல தான் நானும் நான் இந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்று எனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு ஆர்வம் இருந்தது. அதனால் நான் பல நூலகங்களை தேடி இதற்கு தேவையான அனைத்து புத்தகத்தையும் படித்தேன்.  அப்பொழுது நான் பிளாக் எழுதுவோம் என்று நினைத்து பார்க்கவில்லை.

நான் எழுதும் போது ஞாபகத்திற்க்கு வரும் செய்தி அப்படியே எழுதுகிறேன். புத்தகங்கள் பெயர் ஞாபகத்தில் இல்லை. நீங்கள் இந்த தொழில் தான் செய்யவேண்டும் என்றால் நீங்கள் பல புத்தகங்களை படிக்க வேண்டும். நீங்கள் வேறு ஒரு தொழிலில் இருந்துகொண்டு நீங்கள் சோதிடத்தைபற்றி அல்லது ஆன்மீகத்தை பற்றி படிக்கவேண்டும் என்றால் கஷ்டமாக தான் இருக்கும்.

உங்களுக்கு இருக்கும் நேரம் வேலைக்கே போதாது வேலையை பார்த்தோமா வீட்டிற்க்கு வந்தோமா என்று தான் நினைக்க தோன்றும் நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியுள்ளேன் இதனை யார் எல்லாம் கற்றுக்கொள்ள முடியும் என்று அதை நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒருவர் சோதிடத்தை அல்லது ஆன்மீகத்தை பற்றி பதிவு எழுதினால் அவர்களிடம் இருக்கும் விசயத்தில் பத்து சதவீதம் தான் வெளிப்படும் மற்றது அனைத்தும் அவர்களுக்குள்ளே தான் இருக்கும். அவர்களிடம் பழகும் போது தான் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் மற்றது எல்லாம் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தெரிய வாய்ப்பு இருக்கிறது இது எனக்கு மட்டும் அல்ல பதிவுகளில் எழுதும் அனைத்து சோதிடர்களின் குணமாகத்தான் இருக்கும்.

ஏன் என்றால் அவர்கள் கற்ற விசயங்கள் அதற்கு என்றே உழைத்து இருக்கிறார்கள் அவர்கள் அதை வெளியிடும் போது சபை நாகரிகம் மற்றும் எதை எழுதவேண்டும் என்று நினைத்து எழுதுவார்கள் உண்மையில் அவர்களிடம் இருக்கும் உண்மையான அறிவைப்பார்த்தால் அவர்கள் கற்ற வருடம் அவர்களுடன் நாம் பழகித்தான் எடுத்துக்கொள்ளமுடியும்.

சோதிடர்கள் மூளையில் இருக்கும் விசயத்தை எடுப்பதற்க்கு அவர்களுக்கும் நேரம் வந்தால் தான் அவர்களால் வெளிப்படும் அப்படி இல்லை என்றால் மூளையிலேயே இருக்கும் சமயம் வரும்போது தான் அது வெளிப்படும் இது கடவுளின் செயல். அவர்களை குற்றம் சொல்ல முடியாது.

எந்த விசயத்திற்க்கும் நமக்கு அமையும் சூழ்நிலை ரொம்ப முக்கியமான ஒன்று. உங்களுக்கு அந்த மாதிரி சூழ்நிலை அமையும் போது தான் உங்களால் எளிதில் முன்னேறலாம். எனக்கு அமைந்த சூழ்நிலை அப்படி அமைந்தது. எனது ஊர் தஞ்சாவூர் நல்ல சூழ்நிலை அமைந்தது

நீங்கள் இந்த தொழில் தான் செய்கிறேன் என்றால் நீங்கள் கண்டிப்பாக தஞ்சாவூர் செல்லுங்கள் அங்கு இருக்கும் நூலகத்தில் நீங்கள் தேடும் அனைத்திற்க்கும் அங்கு புத்தகமும் உள்ளது ஒலைசுவடிகளும் உள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுவிடலாம்.

தஞ்சாவூரை மையமாக வைத்து தான் பஞ்சாங்கம் எல்லாம் வந்தது இப்பொழுது தான் பல ஊர்களில் இருந்து பஞ்சாங்கங்கள் வருகிறது. அந்தளவுக்கு சோதிடத்திற்க்கும் மற்றும் ஆன்மிகத்திற்க்கும் பெயர் பெற்ற ஊர்.

நீங்கள் அந்த ஊரில் இருக்கும் கோவில்களை முழுவதும் பார்க்கவேண்டும் என்று நினைத்தால் கூட ஒவ்வொரு கோவிலாக பார்ப்பதற்க்கே குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும். கோவில்களில் இருக்கும் கல்வெட்டை படிக்க வேண்டும் என்றால் நமக்கு ஆயுள் பத்தாது. நீங்களே நெட்டில் சிவ வைணவ தலங்களை தேடினால் இருக்கும் அனைத்து கோவிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இருக்கும்.

சமஸ்கிருத மந்திரங்களை அதன் உண்மையான ஒலி வடிவத்தை கேட்கவேண்டும் என்று நினைத்தால் அங்கு உள்ள ஐயரை சொல்வதை கேட்டால் சரியாக இருக்கும்.

உண்மையில் சோதிடம் என்பது ஒரு கஷ்டமான துறை பல கோடி உள்துறைகளை கொண்டது இதை நீங்கள் படிக்க வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் அதற்கான வழி இருக்க வேண்டும்.

நண்பர்களே இந்த தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தக அறிவும் தேவை அதைப்போல் அனுபவ அறிவும் தேவை. உங்களுக்கு மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த மாதிரி பதிவுகளை படித்தால் போதுமான ஒன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: