Followers

Thursday, September 6, 2012

கொடுத்த பணம் திரும்பி வர பரிகாரம்



வணக்கம் நண்பர்களே நேற்று எனது சோதிட வாடிக்கையாளரிடம் பேசும் போது அவர் என்னிடம் சொன்னார் எனக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டு இருந்தார். அதற்கு ஒரு பரிகாரத்தை அவரிடம் சொன்னேன்.

நான் தங்கி இருக்கும் அருகில் இருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் தனியாக சுற்றுவேன். எனக்கு தனிமையில் சுற்றுவது என்றால் ரொம்ப பிடிக்கும். சென்னைக்கு வந்ததில் இருந்து அடிக்கடி நான் செல்லும் பீச் இந்த பெசன்ட் நகர் பீச் தான். நான் இருக்கும் இடத்தில் இருந்து நடக்கும் தூரம் தான் அதனால் அடிக்கடி அங்கு செல்வேன்.

அழகான கடற்கரைக் காற்றில் நடந்து கொண்டிருந்தபொழுது எனக்கு பல சிந்தனைகள் தோன்றும் அப்பொழுது ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் என் மனவானில் வீசத்தொடங்கியது.

கடற்கரை ஒரு சமத்துவமேடை கையிலிருக்கும் காசை எப்படியாவது செலவு செய்தால் போதும் என்று நினைக்கும் உயர்தர மக்களும் ஒவ்வொரு காசிற்கும் கணக்குப்பொடும் நடுத்தர மக்களும் கணக்குபோடுமளவு கூடக் கையில் காசில்லாமல் திண்டாடும் ஏழை மக்களும் சுதந்திரமாக நடமாடும் இடம் அது...

சமத்துவமாக தான் கடற்கரையில் பார்க்க தோன்றுகிறது. மனிதர்களுக்கு இன்றைக்கு விற்க்கும் விலைவாசியில் அவன் சம்பாதிப்பது அவனுக்கு போதவில்லை அதனால் குடும்பத்திற்க்கு தேவையான செலவுக்கு அவன் பிறரை நம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான். ஒரு சிலர் ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் அதனாலும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் பணத்தேவை ஏற்படுகிறது.

இன்றைக்கு இருக்கும் காலகட்டங்களில் ஒருவன் பணத்தை அடுத்தவனிடம் கொடுத்தால் அவனுக்கு திரும்பி வருவதற்க்கு அவன் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் இல்லை கொடுத்தவன் அடி ஆட்களை வைத்து இருக்க வேண்டும் அப்பொழுது தான் கொடுத்த பணம் அவனுக்கு திரும்பி கிடைக்கும்.

அடுத்தவருக்கு பணத்தை கொடுத்தால் அவர்கள் உண்மையில் வறுமையில் இருந்தால் அவர்களிடம் உடனே கேட்காதீர்கள் அவர்களிடம் பணம் இருந்து உங்களுக்கு கொடுக்ககூடாது என்று நினைத்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உப்பு,வெந்தயம்,கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தென் மேற்கு மூலையில் வைத்துவிட்டால் வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Irai Kaathalan said...

இன்றுதான் தங்கள் வலைத்தளம் காண கிடைத்தது ....
அணைத்து பதிவுகளையும் படிக்க ஆர்வம் உள்ளது ...படைப்புகள் அணைத்தும் தெளிவாகவும் , உபயோகமாகவும் உள்ளது ....இன்று முதல் தங்களுடன் எனது பயணமும் ஆரம்பம் .....

rajeshsubbu said...

//* ThirumalaiBaabu said...
இன்றுதான் தங்கள் வலைத்தளம் காண கிடைத்தது ....
அணைத்து பதிவுகளையும் படிக்க ஆர்வம் உள்ளது ...படைப்புகள் அணைத்தும் தெளிவாகவும் , உபயோகமாகவும் உள்ளது ....இன்று முதல் தங்களுடன் எனது பயணமும் ஆரம்பம் ..... *//

வருக வணக்கம் தங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும்