வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் எனது வாழ்த்தினை சொல்லுங்கள்.
இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலியவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
உங்களுக்கு எந்த காரியத்திலும் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் சதுர்த்தி திதி அன்று விநாயகருக்காக விரதம் இருந்து அவரை வணங்கினால் தடைகள் விலகி உங்களுக்கு நன்மை நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
subbu rathinam
http://vazhvuneri.blogspot.com
Post a Comment