Followers

Thursday, September 27, 2012

திருவடி சரணம்




வணக்கம் நண்பர்களே நாம் கோவிலுக்கு போனால் மூலவரை தரிசனம் செய்து விட்டு வந்துவிடுவோம் அவரின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு வருவோம். ஒரு சிலர் கடவுளை பார்த்துவிட்டு உடனே கண்களை மூடிக்கொண்டு வேண்டுதல் வைத்துவிட்டு வந்துவிடுவோம்.


நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும் மூலவரை நன்றாக பார்த்துவிடுங்கள் பார்த்துவிட்டு வெளியில் வந்து அவரின் உருவத்தை நினைத்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். நீங்கள் பார்ப்பதே ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் கண்களை மூடவேண்டாம். 

மனிதனாக பிறந்தால் வாழ்நாட்களில் நீங்கள் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் செல்லாமல் இருக்ககூடாது. ராமேஸ்வரம் சென்றால் சுவாமியை நன்றாக பார்த்துவிடுங்கள். அங்குபோய் கண்களை மூடிக்கொண்டு சாமி தரிசனம் செய்யாதீர்கள். நன்றாக அவரை பார்த்துவிடுங்கள். அவரை நாம் பார்ப்பதில் தான் விசேஷம் உள்ளது. நீங்கள் இதுவரை ராமேஸ்வரம் செல்லவில்லை என்றால் உடனே சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

கோவிலுக்கு போனால் நன்றாக மூலவரை பாருங்கள். மூலவரை பார்த்தவுடன் அவரின் திருவடி (கால்களை) பாருங்கள். திருவடியில் சரணம் அடைந்தால் தான் நம்மால் முன்னேறமுடியும். பெருமாள் கோவிலாக இருந்தால் திருவடிக்கு முக்கியம் கொடுத்து பார்க்கவேண்டும். பெருமாள் கோவிலில் திருவடிக்கு தீபாராதனை காட்டுவார்கள். அதனை பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும். கடவுளின் திருவடிகள் தான் சாதாரண மனிதனை உயர்த்த முடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: