Followers

Friday, September 21, 2012

துலாம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே துலாம் ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய் அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். துணைவர் மூலம் சொத்துக்கள் சேரும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு இந்த வீடு ஆட்சி.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். தனவரவு வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால்  துலாத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

திருமணம் நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியை கொடுக்கும். ஏஜென்சி தொழில் மூலம் வருமானம் வரும். பக்கத்துவீட்டுகாரர்கள் அனுசரனையாக நடந்துக்கொள்ளுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு நான்காவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு உச்ச வீடு

திருமண வாழ்வு மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்லும். வாகன யோகம் அமையும். சொத்துக்கள் சேரும. புதிய வீடு கட்டும் யோகம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

திருமணம் காதல் திருமணமாக இருக்கும். பிற சாதியில் திருமணம் நடைபெறும். பணவரவு வரும். குலதெய்வ வழிபாடு நடைபெறும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஆறாவது வீடாக மீன ராசி வருகிறது அதன் அதிபதி குரு. செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு.

திருமண ஏற்பாடு தள்ளி போகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். பிரச்சினை ஏற்பட்டாலும் சமாதானம் ஆகிவிடுவார்கள். வேலை கிடைக்காமல் இருந்தால் வேலை கிடைக்கும். துணைவர் நோய்வாய்படுவார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டிலே சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சொந்த வீடு.

திருமணம் நடைபெறும். கூட்டு தொழில் ஆரம்பிப்பார்கள். கூட்டுதொழிலில் துணைவரே தொழில் கூட்டாளியாக வருவார். நல்ல வருமானம் கிடைக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு தடை வரும். கூட்டுதொழில் லாபம் தரும். துணைவர் பொறுப்பு அற்ற தன்மையில் காணப்படுவார். அவரால் செலவு ஏற்படும். குடும்பத்தை ஏற்று நடத்த தெரியாது.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். செவ்வாய் இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு பெரியோர்கள் மூலம் நடைபெறும். திருமண ஏற்பாட்டில் பெரியோர்களின் கோபத்தை நீங்கள் சந்திக்க வேண்டிவரும். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்காது. 

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வு அந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. சொத்துகளுக்கு சேதம் வரும். 

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் துலாத்திற்க்கு பதினொராவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் ஆதரவு இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் துலாத்திற்கு பனிரெண்டாவது வீடாக வருவது கன்னி ராசி அதன் அதிபதி புதன். செவ்வாய்க்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாட்டிற்க்கு கடுமையான செலவு வைக்கும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். துணைவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் தங்க வேண்டிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: