Followers

Tuesday, September 11, 2012

கடகம் : ஏழாவது வீட்டு தசா




வணக்கம் நண்பர்களே இப்பதிவில் கடக ராசியை லக்கனமான கொண்டவர்களுக்கு ஏழாம் வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடக லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மகர ராசி அதன் அதிபதி சனி. கடக ராசியின் அதிபதி சந்திரன். லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் சனிக்கு இந்த வீடு பகை.

சந்திரனுக்கும் சனிக்கும் சண்டைதான் வரும். மனசஞ்சலம் தரும். திருமண பேச்சு கடும் முயற்ச்சிக்கு பிறகு நடைபெறும். ஒரு சிலருக்கு நிச்சயதார்த்தவுடன் நின்று போய்விடும். நன்றாக தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு இரண்டாவது வீடு சிம்மம் அதன் அதிபதி சூரியன் சனிக்கு இந்த வீடு பகை

திருமணபேச்சு சண்டையில் முடியும். திருமணம் நடைபெற்று இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கேள்வி குறியாக தான் இருக்கும். கூட்டு தொழில் பிரச்சினையை சந்திக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு மூன்றாவது வீடு கன்னி அதன் அதிபதி புதன். சனிக்கு இந்த வீடு நட்பு வீடு 

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண பேச்சு நடைபெறும். திருமண அண்டை அயலார் தொடர்பு மூலம் நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றுலா ஏற்பாடு செய்துகொண்டு வெளியில் ஊர் சுற்றுவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு நான்காவது வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன் சனிக்கு இந்த வீடு உச்சம்

திருமணம் தாயார் வழியில் வரும். திருமண வாழ்வு சுகமாக செல்லும். குடும்பத்தை ஏற்று நடத்துவார் உங்கள் துணைவர். வாகன யோகம் ஏற்படும். சொத்துக்கள் சேரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கடகத்திற்க்கு ஐந்தாவது வீடாக விருச்சிக ராசி வருகிறது அதன் அதிபதி செவ்வாய் சனிக்கு இந்த வீடு பகை

திருமணம் நடைபெறாமால் இருந்தால் காதல் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்தால் உன்னாலா நான் கெட்டேன் என்னாலா நீ கெட்டாய் என்று குடும்மிபிடி சண்டை தம்பதிக்குள் நடைபெறும். திருமண வாழ்வு நன்றாக இருக்காது.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஆறாவது வீடு தனுசு அதன் அதிபதி குரு. சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும். திருமணம் நடைபெற்று இருந்தால் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டு தொழில் நன்றாக நடைபெறாது. இருவருக்கும் பிரச்சினை ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஏழாவது வீடாக மகர ராசி வருகிறது அதன் அதிபதி சனி. சனியின் சொந்த வீடு

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். கூட்டு தொழில் ஆரம்பிக்க சரியான நேரமாக இது இருக்கும். உங்கள் துணைவியே கூட்டு தொழிலுக்கு பார்ட்டனராக போடலாம். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு எட்டாவது வீடாக கும்பராசி வருகிறது அதன் அதிபதி சனி. சனிக்கு சொந்த வீடு.

மகிழ்ச்சியாக தான் திருமண வாழ்வு செல்லும். கூட்டுத்தொழில் நல்ல வருமானத்தை தரும். உங்கள் துணைவர் லாபநோக்கத்தோடு செயல்படுவார். ஒரு சில நேரம் திருமண வாழ்வில் சிறிய மனதகராறு ஏற்பட செய்யலாம்.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஒன்பதாவது வீடாக மீன ராசி வருகிறது அதன் அதிபதி குரு சனிக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண யோகம் வரும். திருமணம் நடைபெற்று இருந்தால் உங்கள் மணவாழ்வு மகிழ்ச்சியாக செல்லும். பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு ஊரில் நல்ல மரியாதை கிடைக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சனிக்கு இந்த வீடு நீசம்.

திருமண வாழ்வு சிறக்காது. திருமண வாழ்வில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். கூட்டு தொழிலும் இதே நிலைமை தான் நிலவும். வீட்டில் பிரச்சினை என்று தொழிலுக்கு வந்தால் இங்கேயும் பிரச்சினை வருகிறதே என்று மனதை ஒரு வழி பண்ணிவிடும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பதினொராவது வீடாக ரிஷப ராசி வருகிறது அதன் அதிபதி சுக்கிரன் சனிக்கு இந்த வீடு நட்பு. 

திருமணம் நடைபெறாமல் இருந்தால் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் மூலம் திருமணம் நடைபெறும். வரும் துணைவர் நல்ல சொத்துக்களுடன் பொன்நகைகள் உடன் வருவார்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பனிரெண்டாம் வீடாக வருவது மிதுனம். அதன் அதிபதி புதன் சனிக்கு இந்த வீடு நட்பு.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண நடைபெற்று இருந்தால் துணைவர் மூலம் சுபசெலவுகள் வரும். சில நேரங்களில் மருத்துவ செலவுக்கூட வரும்.

மேலே தந்த அனைத்து பலனும் பொதுப்பலன் உங்களுக்கு இது போல் இருக்கு என்று கவலைபடாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: