வணக்கம் நண்பர்களே!
பூர்வ புண்ணியத்தொடர் பார்த்து கொஞ்ச நாட்கள் சென்றுவிட்டது. இடையில் சிறிய இடைவெளி விட்டுருந்தேன் ஏன் என்றால் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்தால் வாந்தி தான் எடுப்பீர்கள் என்று தெரிந்து இடைவெளிவிட்டு ஆரம்பித்து இருக்கிறேன்.
பூர்வபுண்ணியத்தொடரை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் கேட்ட வார்த்தை இது எப்படி இந்த காலத்தில் சாத்தியப்படும் என்று தான் கேட்டார்கள். நான் இதனை எழுதும்போது நினைத்தது நூற்றுக்கு ஒரு நபர் மாறினாலே போதும் என்ற கணக்கில் தான் எழுதினேன் ஆனால் இன்று பல பேர் மாறிவிட்டார்கள் அப்படி பார்க்கும்போது இந்த தொடர் நல்ல வெற்றி அடைந்திருக்கிறது.
பல நண்பர்கள் இதனை படித்துவிட்டு சொன்னார்கள். இந்த தொடர் ஒரு சமுதாய மாற்றத்தை கொடுக்கும். நீங்கள் சோதிடர் ஒரு சமுதாயத்தின் மீது இவ்வளவு அக்கறை வைத்து எழுதுவது நன்றாக இருக்கிறது என்றும் சொன்னார்கள். இதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன் சமுதாய முன்னேற்றத்திற்க்கு பூர்வபுண்ணியதொடர் வழி செய்யும். எப்படி என்றால் அடுத்த மனிதனையும் மதிக்கும் குணம். ஜாதி மதம் இன்றி பார்க்கும் பார்வையாவது வரும் என்பதால் இது சமுதாய மாற்றத்திற்க்கு வழி செய்யும்.
இன்று தமிழர்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்று சொல்லுவது எல்லாம் எனக்கு சுத்த பிடிக்காத ஒரு விசயமாக தான் எனக்கு தோன்றும். அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. இந்த காலத்தில் இவர்கள் இருப்பதை பார்த்தால் அந்த காலத்தில் இவர்கள் அப்படி தான் இருந்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.
இப்பொழுது நீங்களே பாருங்கள் ஒரு ஊரில் ஒரு ஜாதி வகுப்பினர் நூறு குடும்பங்கள் வசிப்பார்கள் அந்த ஊரில் பத்து குடும்பங்கள் வேறு ஜாதியாக இருக்கும் அந்த பத்து குடும்பங்களை நூறு குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டை போடுவது. அவர்களை அடிப்பது இது தான் வேலை. இதற்கு இவர்களின் முன்னோர்களின் படித்தை பிளக்ஸ் போட்டு இந்த வீரப்பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள் என்று ஜாதியை தூண்டிவிடுவது. இது எப்படி வீரமாகும்?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நடக்கும் விசயம் இது தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஜாதினர் கூட்டமாக வசித்துக்கொண்டு குறைந்த அளவில் உள்ள ஜாதி மக்களை வம்புக்கு இழுத்து அடிப்பது. இது தான் தமிழனின் வீரமா? கூட்டமாக இருப்பவன் கூட்டமாக இருப்பவனிடம் சண்டை போட்டால் ஏற்றுக்கொள்ளலாம் பரவாயில்லை கடுமையான வீரம் உள்ளவர்கள். வீரத்தின் அடையாளமாக இருக்கிறார்கள்.
இதே வேலையை தான் அந்த காலத்தில் உள்ளவர்களும் செய்திருப்பார்கள். அதனால் நீங்களாவது திருந்திவிடுங்கள். நம்ம ஆளங்க வீரம் இலங்கை பிரச்சினையிலேயே தெரிந்துவிட்டது.
ஊரு ஊருக்கு பிளக்ஸ் போர்டு வைத்துக்கொண்டு அந்த பரம்பரையில் நாங்கள் வந்தவர்கள் இந்த பரம்பரையில் நாங்கள் வந்தவர்கள் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காமல் சரியான பாதையை ஆன்மீகம் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு அனைத்து மக்களும் உங்களின் சொந்தங்கள் தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அந்த பரம்பொருளிடம் சேர ஆயத்தமாகுங்கள்.
தமிழன் அனைத்து நாட்டிலும் சென்று வென்று வந்திருக்கிறார்களே அது வீரம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவன் அவன் வேலையை அவன் ஊரில் செய்துக்கொண்டுருப்பான். அவனை போய் நூறு பேர் சேர்ந்து சண்டை போட்டு வெற்றி பெற்று வந்தால் அது எப்படி வீரம் என்று ஏற்றுக்கொள்வது. அவர்கள் இருக்கும் ஊரில் அந்த நபர்களுக்கு ஏற்றவாறு இயற்கை இருந்திருக்கும் அவர்கள் அங்கு தான் பிழைப்பை நடத்திக்கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையை நடத்திக்கொண்டுருப்பவர்களை போய் அழிப்பது வீரம் அல்ல. அவர்கள் இவர்களிடம் சண்டை போட்டு இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழன் அனைத்து நாட்டிலும் சென்று வென்று வந்திருக்கிறார்களே அது வீரம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவன் அவன் வேலையை அவன் ஊரில் செய்துக்கொண்டுருப்பான். அவனை போய் நூறு பேர் சேர்ந்து சண்டை போட்டு வெற்றி பெற்று வந்தால் அது எப்படி வீரம் என்று ஏற்றுக்கொள்வது. அவர்கள் இருக்கும் ஊரில் அந்த நபர்களுக்கு ஏற்றவாறு இயற்கை இருந்திருக்கும் அவர்கள் அங்கு தான் பிழைப்பை நடத்திக்கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையை நடத்திக்கொண்டுருப்பவர்களை போய் அழிப்பது வீரம் அல்ல. அவர்கள் இவர்களிடம் சண்டை போட்டு இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
இவர் என்னடா இப்படி எழுதுகிறாரே இவர் இந்த விசயத்தில் அடிப்பட்டு இருப்பாரோ என்று நினைக்க வேண்டாம். நானும் பெரும்பான்மையான ஒரு சமுதாயத்தில் பிறந்தவன் தான் ஆனால் எனக்கு அதில் துளிக்கூட விருப்பம் இல்லை. அனைத்து மக்களையும் தன்னைபோல் நேசிக்கும் பங்குவம் வந்தால் தான் ஆன்மீகத்தில் பயணிக்கமுடியும் என்ற எண்ணம் உள்ளவன் நான்.
நன்றி நண்பர்களே!
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
nuthule oru varthai.. inimelavathu manithak kootam thirunthinal nallathu
//* raja said...
nuthule oru varthai.. inimelavathu manithak kootam thirunthinal nallathu *//
வருக வணக்கம் தங்கள் கருத்துக்கு நன்றி
சரியான கருத்து நான் இலங்கையன் இது பொதுவாக எல்ல நாட்டு தமிழர் பொருத்த்மானது
Post a Comment