வணக்கம் நண்பர்களே !
ஜீவசமாதி வழிபாடு என்பது இந்த காலத்தில் அதுவும் இப்பொழுது பிரபலமாகி வருகிறது. இந்த நேரத்தில் நேற்று சந்தித்த நண்பர் அலெக்ஸாண்டர் இதனைப்பற்றி கேட்டார் அவருக்கு அப்பொழுதே விளக்கிவிட்டேன். அந்த கருத்தை உங்களுக்கு தரலாம் என்று நினைத்து இப்பதிவை அளிக்கிறேன்.
ஜீவசமாதி என்பது ஒரு நபர் தானாகவே இந்த நாளில் இறக்கவேண்டும் என்று நினைத்து அவராக சமாதியில் போய் அமர்ந்துவிடுவது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் இறந்தாலும் அவரின் ஜீவன் அங்கேயே இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. உண்மையில் இப்படி செய்தவர்கள் தமிழ்நாட்டில் குறைவாக தான் இருக்கும். சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்கள் தான் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இன்று தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் ஜீவசமாதி இருக்கிறது. எந்த ஊரை எடுத்தாலும் அந்த ஊரில் குறைந்தது பத்து ஜீவசமாதி இருக்கிறது இது எப்படி சாத்தியப்பட்டது என்று நான் சிந்தனை செய்தது உண்டு. அவன் அவன் ஏதோ ஏதோ சிந்தனை செய்கிறான். அமெரிக்காவிற்க்கு போகலாமா சிங்கபூர் செல்லலாம கோடிகளை எப்படி சம்பாதிப்பது என்று நினைக்கும்போது நான் இப்படி நினைத்தேன்.
நமது நாட்டில் பழங்காலத்தில் நமது வாழ்க்கை முறை கூட்டுகுடும்பமாக தான் இருந்து வந்தது. ஒரு குடும்பத்தில் குறைந்தது எட்டு பேர்களாவது இருக்கும். இதில் மூத்த பையனாக பிறந்தவர் அந்த குடும்பத்தி்ல் செல்வாக்காக வளர்ப்பார்கள். மூத்த பையனுக்கு பிறகு பிறக்கும் குழந்தைககள் வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள். மூத்தவர் அவர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இவர் நிழலில் இருப்பார்.
மூத்தவர் மட்டும் தான் இந்த குடும்பத்தை கட்டி காப்பவர் போல் காட்டிக்கொண்டு பிறகு உள்ள தம்பிகள் இருந்திருப்பார்கள். உண்மையில் அந்த காலத்தில் விவரம் தெரிந்த ஆள் என்றால் ஊரி்ல் ஒருத்தன் தேறமாட்டான். இந்த மூத்தவன் இறக்கும் நேரத்தில் பின்னாடி இருக்கும் தம்பிகள் இவர் நமது குடும்பத்திற்க்காக உழைத்தவர் இவருக்கு ஒரு சமாதி கட்டி நாம் வணங்கி வருவோம் என்று அவர் இறந்தவுடன் அவருக்கு ஒரு சமாதியை கட்டுவார்கள். அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அவரை வணங்கி வருவார்கள். இந்த சமாதி தான் இந்த காலத்தில் ஜீவசமாதியாக பல ஊர்களில் இருக்கிறது.
பின்பு அவரின் போட்டாவில் எப்படி தாடி முடியோடு சாமியார் போல் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா அந்த காலத்தில் சாதாரண மனிதர்கள் இப்படி வைத்திருப்பது அந்த காலத்தில் பேஷன்.
அவரை நாம் வணங்கும்போது நமக்கு நல்லது நடக்கிறது எப்படி ?
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் வேறு என்ன. அந்த நேரத்தில் இவனுக்கு நடக்க வேண்டும் என்று இருக்கும் அந்த நேரம் பார்த்து அந்த சமாதிக்கு சென்று வந்திருப்பான் அதனால் நடக்கும். அனைத்தும் மனம் தான் காரணம் உங்களின் மனதை உருகி உங்கள் வீட்டில் உள்ள கழிப்பறையில் இருந்துக்கொண்டு வேண்டினாலும் அது நடக்கும்.
அப்பொழுது ஜீவசமாதியே இல்லை என்கிறீர்களா?
இருக்கு ஆனா இல்லை.
தமிழ்நாட்டில் பத்து ஜீவசமாதி தேறினாலே அது தமிழ்நாட்டிற்க்கு புண்ணியம் தான்.
நன்றி நண்பர்களே!
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment