Followers

Wednesday, March 20, 2013

பூர்வ புண்ணியம் 45



வணக்கம் நண்பர்களே !
                     செவ்வாயும் சனியும் சேர்ந்து ஐந்தில் இருக்கும்போது என்ன பலன் என்பதை பார்த்து வருகிறோம் அப்படி பார்க்கும்போது பல நண்பர்கள் எனக்கு போன் செய்து இந்த தொடர் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று சொன்னார்கள். 

நீங்கள் பயப்படதேவையில்லை உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். நீங்கள் மறுபடியும் புல் விலங்காகவோ பிறக்காமல் இருப்பதற்க்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தொடர் எழுதப்படுகிறது.

நீங்கள் ஒருவருக்கு செய்த கொடுமையை அவர் மூலம் நிவர்த்திச்செய்யும்போது உங்களுக்கு அற்புதமான வாழ்க்கை அமைந்து அதன் மூலம் நீங்கள் கடவுளை அடைய ஒரு வழி இது. ஒருவர் மனிதனாக பிறப்பதற்க்கே பல கோடி வருடங்கள் ஆகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி மனிதனாக பிறப்பு எடுத்த பிறகு நீங்கள் தவறு செய்து மறுபடியும் புல்லாகவோ விலங்கவோ செல்ல வேண்டுமா? 

மனிதப்பிறப்பு எடுத்தபிறகு விலங்கு பிறப்பிற்க்கு செல்லுவது என்பது கடினமான ஒன்று. மனிதப்பிறப்பு அற்புதத்திலும் அற்புதம். மற்றைய விலங்குகளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்றைய விலங்குகள் எதனைப்பற்றியும் அதிகமாக அக்கறைப்பட்டு கொண்டிருப்பதில்லை. மனிதன் மட்டும் அதிக அக்கறையுடன் இருப்பான். ஒரு குழந்தையை வளர்ப்பதில் கூட அதிக ஈடுபாடு கொண்டு வளர்ப்பான். மற்றைய விலங்குகள் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. மனிதன் தன் குழந்தைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டு வளர்க்கவில்லை என்றால் அந்த குழந்தை ஒழுங்காக வளராது. 

விலங்குகளின் பிறப்பு எடுத்தால் அது வழிபாடு செய்யவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. மனிதனாக பிறக்கும்போது மட்டுமே அனைத்து முயற்சியும் எடுக்கமுடியும். 

காமத்தைப்பற்றி இந்த வேளையில் சொல்லியாகவேண்டும். ஒரு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய சக்தி காமம். இதனை வைத்து தான் ஆன்மீகபபாதையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை பல பேர்க்கள் இதனைப்பற்றி சொல்லியுள்ளார்கள். விந்து கீழ்நோக்கி சென்றால் அது காமம். மேல்நோக்கி சென்றால் அது ஆன்மீகம்.  

உலகத்தில் நாத்திகவாதிகள் என்று ஒருவரும் இல்லை. அனைவரும் ஆத்திகவாதியாக தான் இருக்கிறார்கள். ஆண்மை தன்மை இல்லாமல் இருந்தால் நாத்திகவாதிகள் என்று சொல்லலாம். மக்கள் அனைவரும் காமத்தை விரும்புகிறார்கள். 

ஏன் காமத்தை விரும்புகிறார்கள் என்றால் அந்த நேரத்தில் ஏதோ ஒரு பரவசம் ஏற்படுகிறது. அந்த பரவசத்திற்க்காக தான் அனைவரும் ஏங்குகிறார்கள். அந்த பரவசம் தொடர்ந்து நின்றால் அது ஆன்மீகம். காமத்தில் கீழ்நோக்கி செல்லும்போது நிமிடத்தில் நின்றுவிடுகிறது. மறுபடி மறுபடியும் அதனையோ நோக்கி மனிதன் இழுத்துச்செல்லப்படுகிறான்.

மனிதனுக்கு இந்த வழி மூலம் ஆன்மீகத்தை அடைய அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது நீங்கள் விலங்காக பிறந்தால் ஆன்மீகத்திற்க்கு செல்லுவது அரிதான ஒரு செயல். மற்றைய விலங்குகள் உடலறவு கொண்ட பிறகு அந்த விலங்கு கற்பமாகிவிட்டால் அந்த விலங்கையை தீண்டக்கூட செய்யாது. ஆனால் மனிதன் தன் துணைவி பெண் வீட்டிற்க்கு அழைத்து செல்லுவது வரை விடுவது கிடையாது. அந்தளவு ஈடுபாடு காட்டும் ஒரே விலங்கு மனித விலங்கு தான். 

ஏன் அந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறான் என்றால் ஆன்மீகத்திற்க்கு செல்ல வேண்டும் என்று நிர்பந்தம் ஏற்படுவதால் தான். அந்த சக்தியை மாற்றும் திறமையை அவனுக்கு கற்பித்துவிட்டால் அவன் ஆன்மீகவாழ்க்கையோடு ஒன்றிவிடுவான்.

நீங்கள் மனிதபிறப்பு எடுத்ததின் நோக்கத்தை இந்த ஒரு நிகழ்வு மூலம் உங்களுக்கு விளக்கிவிட்டேன். நீங்கள் அடுத்தபிறப்பு எவ்வாறு அமையவேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். ஜாதக கதம்பம் எதனையும் திணிக்காது இருப்பதை சொல்லும் அதனை எடுத்துக்கொள்வதும் அப்படியே விட்டுவிடுவதும் உங்களுடைய முடிவுக்கு விடுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: