Followers

Saturday, March 2, 2013

ஆன்மீக அனுபவங்கள் 74



வணக்கம் நண்பர்களே!
                     ஆத்மாவைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் கேள்விகேட்பது எல்லாம் ஆத்மாவைப்பற்றி அனைத்திற்க்கும் என்னால் பதில் தரஇயலாது. முடிந்தளவுக்கு நான் தரமுயல்கிறேன். நான் இதனைப்பற்றி எழுதலாம் நீங்கள் பயிற்சி செய்தால் மட்டுமே ஆத்மாவைப்பற்றி உணரலாம்.

இரு மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் ஆன்மீகத்தில் நல்ல பயிற்சி செய்து இருந்தார்கள் என்றால் இருவரும் ஒருவருடைய ஆத்மாவை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொள்ளலாம். இவருடைய ஆத்மாவை அவருக்கும். அவருடைய ஆத்மாவை இவருக்கும் மாற்றிக்கொள்ளலாம். பல ஆன்மீகவாதிகள் அவர்களுடைய சிஷ்யர்களுடன் மாற்றிக்கொள்வார்கள். இது எல்லாம் செய்வது கடினமான வேலை. ஒரு சிலர் எளிதாக மாற்றிக்கொள்வார்கள். நான் இதனை செய்து பார்த்ததில்லை. 

மனித ஆத்மாவை மிருகங்களின் ஆத்மாவாகவும் மாற்றுவார்கள். எப்படி என்றால் மாந்தீரிகத்தில் இதனை செய்வார்கள். ஒரு மானை வேட்டையாட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள் இவர்கள் சிங்கம் போல் இவர்களின் ஆத்மாவை மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள். அந்த வேட்டை முடிந்த பிறகு தான் இவர்கள் மனித ஆத்மாவாக மாறும். அதை வேட்டையாடும் நேரத்தில் அந்த ஆத்மா சிங்க ஆத்மா தான் அந்தளவுக்கு கோபமாக மாறி வேட்டையாடும். பலதரப்பட்ட மிருகங்களாக மாற்றமுடியும்.

ஒருவருக்கு பாம்பு வைத்து தீங்கு செய்தால் கருட ஆத்மாவாக மாறி அந்த பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்துவார்கள். அந்த நேரத்தில் மனித ஆத்மா கருட ஆத்மாவாக மாறிவிடும்.

இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆத்மாவைப்பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன். நீங்கள் என்னைப்பார்த்து பயப்பட தேவையில்லை. ஏன் என்றால் அனைத்தும் கற்க்கும் போது நமது மனம் குழந்தை போல் மாறிவிடும். என்னால் அடுத்தவர்களுக்கு எந்த தீங்கும் செய்யமுடியாது. இந்த மாதிரி மனம் இருப்பதால் என்னை நன்றாக ஏமாற்றிவிடுவார்கள்.

ஆத்மாவைப்பற்றி படித்து தெரிந்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுக்கு எளிதில் விளங்கும். ஒன்றும் தெரியாமல் நீங்கள் ஆத்மா என்றால் யாரும் நம்பமாட்டீர்கள். எனக்கு இந்த மாதிரி சப்ஜெட் பிடிக்கும். அதனால் அனைத்தையும் விரும்பி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் தொட நினைத்த தூரம் இன்றும் வரவில்லை, முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.நீங்களும் காலத்தை வீணடிக்காமல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: