Followers

Wednesday, March 27, 2013

கன்னி: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே !
                   கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மகரம் அதன் அதிபதி சனி.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

உங்களின் வீட்டில் வேலை செய்த வேலையாட்கள். 

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இருப்பீர்கள் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1 ,2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

சனிக்கிரகத்திற்க்கு சொந்த வீடு மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு உச்ச வீடு இதனைப்படித்துவிட்டு எப்படி கெடுதல் செய்யும் என்று நினைக்கலாம். மனிதப்பிறப்பு எடுத்ததின் நோக்கம் பூர்வகர்மாவின் தாக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்க்காக தான். ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இதனை பூர்த்தி செய்யதான் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

பரிகாரம்

செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் நவகிரங்களை வணங்கிவாருங்கள். உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுடன் தொடர்பு உள்ளவர்கள் உங்களை சந்திப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: