Followers

Friday, March 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 73



வணக்கம் நண்பர்களே!
                    நீங்கள் அனைவரும் யாருக்காவது ஒரு முறையாவது சோதிடம் பார்ப்பீர்கள். பிறர்க்கு சோதிடம் பார்க்கும் போது நீங்கள் அவர்களுக்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம் அல்லது நீங்களே பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்தால் அதற்கு தகுந்த பணத்தை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். பணத்தை வாங்காமல் பரிகாரம் செய்யும்போது உங்களிடம் இருக்கும் சக்தி அந்த நபருக்கு செய்யாமல் விட்டுவிடும் உங்களின் சக்தி உங்களின் நலனில் தான் முக்கியத்துவம் கொடுக்கும். உங்களின் நலத்திற்க்கு பிறகு தான் அடுத்தவர்களின் நலத்தைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளும். உங்களின் மனம் குளிர்ந்துவிட்டால் அடுத்தவர்களின் மனதை குளிர்விக்கமுடியும். 

உங்களின் மனம் நல்லமுறையில் இருக்கும்போது அடுத்தவர்களுக்கு ஏற்பட்ட எப்பேர்பட்ட பிரச்சினையும் தீர்ந்துவிடும். உங்களின் மனதில் தான் எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு இலவசமாக செய்யலாம்.

ஒரு ஜாதகத்தை எடுத்தவுடன் உடனே பரிகாரத்தை சொல்லிவிடாதீர்கள் நாம் கொடுக்கும் பரிகாரம் இந்த நபருக்கு சரிவருமா என்று நன்றாக ஆலோசித்து சொல்லவேண்டும். நாம் கொடுக்கும் பரிகாரமும் நமக்கு எதிராக வருவதற்க்க வாய்ப்பு இருக்கிறது அதனால் நன்றாக யோசித்து உங்களின் சக்தியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு பரிகாரத்தை சொல்லுங்கள்.

உங்களிடம் சக்தி இல்லை என்றால் உங்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிகாரத்தை சொல்லுங்கள். அப்பொழுது அவர்களுக்கு பரிகாரம் சரியாக போய்சேரும். ஒவ்வொருவருக்கும் ஜாதகம் தனித்தன்மையுடன் இருக்கின்றது அதுபோல பரிகாரமும் தனித்தன்மையுடன் தான் இருக்கும். அனைவருக்கும் ஒரே பரிகாரத்தை சொல்லாதீர்கள்.

பரிகாரம் நாம் செய்யும்போது அவர்களுக்கு நேரிடையாக செய்வதுபோல நாம் நம் வீட்டிற்க்கு வந்தபிறகு அவர்களுக்காக நாம் பிராத்தணையை நம் சக்தியிடம் செய்யவேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு பரிகாரம் சரியாக போய்சேரும். இதை தான் நேர்அடி மறைஅடி என்று சொல்வார்கள். மறைஅடியில் அனைத்தும் வெற்றியை தரும்.

மறைஅடி என்பது நாம் நமது வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் செய்கின்ற பரிகாரம். நான் செய்யும் பரிகாரங்கள் 75 சதவீதம் மறைஅடி தான். என்னை வந்து பார்க்கின்றவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் உங்களுக்கு அந்த செயல் நடைபெறும் என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது அவர்களுக்கு செய்துவிடுவேன். 

என்னுடைய குருநாதர் சொல்லுவார் நான் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்று தோல்வியை சந்திக்கிறதோ அன்று நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்பார் அந்தளவுக்கு சக்தியை பயன்படுத்துபவர். நான் எடுத்த பல காரியங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது அதற்கு காரணம் ஒரு சில பாதிப்புக்கள் அந்த செயலில் வரும்போது அதனை நான் விட்டுவிடுவேன்.

ஒரு சிலருக்கு நான் பரிகாரம் செய்வேன். அவர்களின் குடும்பத்திற்க்கு முன்ஜென்மததில் ஏதாவது சாபம் இருக்கும். நான் செய்கின்ற செயலில் அந்த பாதிக்கப்பட்ட ஆத்மா குறுக்கே நிற்க்கும் இப்படி நிற்க்கும்போது அதனை நான் விட்டுவிடுவேன். பாதிக்கப்பட்ட ஆத்மா குறுக்கே நிற்க்கும்போது அதனை மீறி செய்யமுடியும் என்றாலும் நான் மீறி செய்வதில்லை அதன் சாபத்தை நான் ஏன் வாங்கவேண்டும் அதனை திருப்திபடுத்த பல வழிகள் செய்யவேண்டும் அதற்கு பணம் தேவைப்படும். இதனை நான் வாடிக்கையாளரிடம் சொல்லமுடியாது. இவன் என்னடா இப்படி பணம் கேட்கிறான் என்று நினைப்பார்கள்.

ஒரு ஜாதகருக்கு பரிகாரம் செய்யும்போது பல சிக்கலை தாண்டி செய்யவேண்டியநிலை ஏற்படுகிறது. அந்த சிக்கல்கள் எல்லாம் நாம் தாங்க பல சக்திகள் நம்மிடம் இருக்கவேண்டும் அப்பொழுது நாம் செய்கின்ற பரிகாரம் வெற்றி பெறும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: