வணக்கம் நண்பர்களே!
இன்று காலையிலிருந்து குலதெய்வம் வழிபாடு சம்பந்தமாக போன்கால்கள் வந்தன ஒன்று பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நண்பர் கேட்டார். ஒரு பெண் கோயம்புத்தூரில் இருந்து கேட்டார்.
இன்று ஏதோ இதனைப்பற்றி எழுதவேண்டும் என்று அம்மா நினைக்கிறாள் என்று நினைத்து இந்த பதிவை தருகிறேன். குலதெய்வ வழிபாடு என்பது நமது கடமை. எந்த காரியத்தை செய்தாலும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே செய்ய வேண்டும் என்பது நமது பாரம்பரியத்தின் அடையாளம்.
பல சோதிடர்களிடம் கேட்கும்போது அவர்கள் சொல்லுவார்கள் உங்களின் குலதெய்வம் கட்டப்பட்டு இருக்கிறது என்பார்கள். ஒரு சில சோதிடர்கள் உண்மையை சொல்லிவிடுவார்கள் பாதிபேர் இதன் மூலம் ஏதாவது வருமானம் வரும் என்று சும்மா சொல்லிவிடுவார்கள். உங்களின் குலதெய்வம் உங்களுக்கு வேண்டியப்பட்டவர்கள் மூலம் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணி இதனை செய்கிறார்கள். அப்படி கட்டப்பட்டு இருந்தால் நீங்கள் நல்ல பூஜை செய்கிறவர்களா பார்த்து அவரை வைத்து இந்த கட்டை அவிழ்த்துவிடுங்கள். அப்பொழுது உங்களின் குலதெய்வம் உங்களுக்கு சாதகமாக செய்யும்.
இப்பொழுது பில்லி சூனியம் எல்லாம் கிராமத்தை விட நகரத்தில் அதிகமாக நடைபெற ஆரம்பித்து இருக்கிறது. படிக்காதவன் அடுத்தவன் நல்ல இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். படித்தவன் அடுத்தவனை அழிக்க ஆரம்பித்து இருக்கிறான். பல நகரங்களில் இப்படிபட்ட மனநிலை உள்ளவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காதீர்கள். இப்பொழுது நீங்கள் தீங்கு செய்தால் நாளை உங்களுக்கு அது திரும்பிவரும்.
குலதெய்வ அருளை பெறுவதற்க்கு பல பேர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு சென்று அந்த கோவில் மண்ணை எடுத்து வந்து அவர்களின் வீட்டில் கட்டிவைக்க சொல்லுகிறார்கள் அவ்வாறு செய்வது தவறு. நீங்கள் குலதெய்வத்திடம் மண் எடுத்தால் அந்த மண்ணை வைத்து கோவில் தான் கட்டவேண்டும் வீட்டிற்க்கு கொண்டு வந்து வைக்ககூடாது. குலதெய்வ கோவில் இருந்து எலும்மிச்சை பழம் பூ இந்த மாதிரி கொடுத்தால் வீட்டிற்க்குள் கொண்டு வந்து பூஜையறையில் வைக்கலாம்.
ஒரு சில கோவில்களில் தேங்காயை மந்திரித்து அதனை ஒரு பையில் வைத்து இதனை உங்களின் வாசல்படியில் கட்டிவிடுங்கள் என்று சொல்லுவார்கள். இது எதற்கு என்றால் தீய சக்தி உங்களின் வீட்டிற்க்குள் வரகூடாது என்பதற்க்காக சொல்லுவார்கள் அது போல் இருந்தால் நீங்கள் வாங்கிவந்து உங்களின் வீட்டின் வாசற்படியில் கட்டிவைக்கலாம்.
நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போதே இதனை எங்கு வீட்டில் வைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவரிடம் கேட்பது நல்லது ஏன் என்றால் அவர்கள் எதற்காக தயார்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு சிலர் பணவரவுக்காக தயார்படுத்தி இருக்கலாம் அதனை நாம் வீட்டிற்க்குள் கொண்டுவந்து வைக்ககாமல் வெளியில் வைத்துவிட்டால் நமக்கு பணவரவு வராது அதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
தன் கட்ட தானே அவுதுக்க தெரியாத குல தெய்வம் நமக்கு என்ன பெரியதாக உதவி செய்ய முடியும் சுப்பு ?
சரி அமெரிக்கர்கள் எந்த குல தேவதையை வழி படுகிறார்கள் ? சரி UK காரன் எந்த குல தேவதையை வழி படுகிறான் ? இவர்கள் எல்லாம் ஒரு 200 வருடமாக வளமாகதானே இருக்கிரார்கள்...........நாம் தான் குல தெய்வம் இல்லை என்றால் என்று பயம் காட்டி கொண்டு இருக்கிறோம்...... சரி தானே :)
DEAR KRISHNA!!
நம்முடைய தொன்மை எவளவு !
Don't compare with USA,UK.
U know they make research about siddhars.
வணக்கம் கிருஷ்ணா உங்களுக்கு பதிலை பதிவில் தந்துவிட்டேன். நன்றி.
வணக்கம் Dreamwave நாம் என்ன தான் சொன்னாலும். சில நபர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த நாட்டில் எல்லாம் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பதை அங்கு போய் பார்த்தால் தான் தெரியும். இருக்கும் நாட்டிலேயே அமைதியாக வாழக்கூடிய நாடு என்றால் அது இந்தியாவாக தான் இருக்கும்.
Post a Comment