வணக்கம் நண்பர்களே !
ஐந்தாவது வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம் இடையில் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்து வந்ததால் இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன். இப்பொழுது தொடர்ந்து பார்க்கலாம்.
சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
சிம்ம ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு ராசி அதன் அதிபதி குரு.
ஐந்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்ம ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு ராசி அதன் அதிபதி குரு. குரு சிம்மத்திற்க்கு நட்பு கிரகம்.
நல்ல யோகம் வரும். திடீர் பணவரவு வந்து உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். அரசாங்க மூலம் வருமானம் வரும். குழந்தைகள் உருவாகும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு இரண்டாவது வீடு கன்னி ராசி அதன் அதிபதி புதன். குரு இந்த வீட்டில் நட்பு.
ஏஜென்சி தொழில் மூலம் வருமானம் வரும். தனவரவிற்க்கு குறைவு இருக்காது. வீட்டில் புதிய நபர் வருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்கு மூன்றாவது வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரன். குருவிற்க்கு இந்த வீடு பகை
சிறுபயணத்தில் அடிப்படும். புத்திரதோஷம் ஏற்படும். குழந்தைகள் இருந்தால் அவர்கள் மூலம் சண்டை சச்சரவு ஏற்படும். வீண் செலவு ஏற்படும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு நான்காவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். குரு இந்த ராசியில் நட்பாகிறார்.
ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு நான்காவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். குரு இந்த ராசியில் நட்பாகிறார்.
வாகன யோகம் ஏற்படும். வீடு கட்டும் யோகம் அமையும். பூமி வாங்கும் யோகம் ஏற்படும். புத்திர தோஷத்தால் கருக்கலைப்பு ஏற்படும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்ம்த்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. குரு சொந்த வீட்டில் அமருகிறார்.
திடிர் பணவரவு வரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். குலதெய்வவழிபாடு செய்வீர்கள். காதல் வயப்படுவீர்கள்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. குருவிற்க்கு இந்த வீடு நீசம்.
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு பணவரவை பெறலாம். மாமன் உங்களுக்கு உதவி செய்வார். மாமன் வழியில் உள்ள பெண் மீது காதல் வரும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. குரு இந்த ராசியில் சமம் பெறுகிறார்.
காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு ஏற்படும். துணைவரால் அதிர்ஷ்டம் ஏற்படும். மணவாழ்க்கை நன்றாக செல்லும். புதிய உறவுகள் ஏற்படும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. குருவின் சொந்தவீடு
முன்னோர்களின் சொத்து கிடைக்கும். வாகனங்களி்ல் செல்லும் போது விபத்து ஏற்படும் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. காதல் வகையில் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.
ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு ஒன்பதாவது வீடு மேஷம் அதன் அதிபதி செவ்வாய். குருவிற்க்கு இந்த ராசி நட்பு.
முன்னோர்களின் உதவி கி்டைக்கும். தந்தை உங்களுக்கு உதவி செய்வார் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களை மதிப்பார்கள்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். குரு இந்த ராசியில் பகை.
வேலையில் பிரச்சினை ஏற்படும். சில சமயங்களில் வேலையும் போய்விடும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பதினோராம் வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். குரு இந்த ராசியில் பகை.
புத்திரபாக்கியம் ஏற்படும். தனவரவு நன்றாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளி்ன் உதவியுடன் முன்னேற்ற பாதைக்கு செல்வீர்கள்.
ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சிம்மத்திற்க்கு பனிரெண்டாவது வீடு கடகம் அதன் அதிபதி சந்திரன். குருவிற்க்கு இந்த ராசி உச்சம்.
பணவரவு நன்றாக இருக்கும். சுபச்செலவு ஏற்படும். திருமண வாய்ப்பு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.
நன்றி நண்பர்களே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment