வணக்கம் நண்பர்களே!
எனக்கு தினமும் இரண்டு போன் கால் பங்குசந்தை சோதிடத்தைப்பற்றி வருகிறது. மக்களுக்கு பணத்தின் மீது அவ்வளவு ஆசை இருப்பது இதன் மூலம் தெரிகிறது. நான் சோதிடத்தை பதிவில் மட்டுமே எழுதுகிறேன். சோதிட வகுப்பு எடுப்பது கிடையாது.
நான் கமாடிட்டி வணிகத்தில் இருப்பதால் எதேச்சையாக சோதிடத்தை கமாடிட்டியில் பயன்படுத்தி பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன் அது சரியாக வந்தது. சுமார் ஒரு வருடகாலங்கள் பதிவு போடுவது சோதிடத்தை கமாடிட்டியில் பயன்படுத்திப்பார்ப்பது இது தான் எனது வேலையாக இருந்து வந்தது. பிறகு ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இதனை செய்துக்கொடுத்தேன். அவர்கள் அனைவரும் நல்ல பணத்தை பார்த்தார்கள். இப்பொழுது இதனை நான் செய்யவி்ல்லை.
பல பேர் என்னிடம் போன் செய்து நான் பங்குசந்தை சோதிட வகுப்பில் பயிற்சி பெற்றுருக்கிறேன் ஆனால் அதனை பயன்படுத்தும்போது சரியாக வரவில்லை என்று சொன்னார்கள். அப்படி சரியாக வரவி்ல்லை என்றால் நீங்கள் படித்த சோதிடவகுப்பு வீண் என்று தான் அர்த்தம். பல பேர் KP சிஸ்டத்தை பயன்படுத்தி இதனை கணிக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள். நான் KP சிஸ்டத்தை பயன்படுத்துவது கிடையாது. வேதிக் சோதிடத்தை பயன்படுத்தி தான் கணிப்பேன். நான் கணித்து பயன்படுத்தும்போது ஒரு நாள் கூட தவறியது கிடையாது. இத்தனை நிமித்திற்க்கு மார்க்கெட் மாறும் என்பதை துல்லியமாக கணிக்கமுடியும்.
நீங்கள் பங்குவர்த்தகத்தில் டெக்னிக்கல் பற்றி கற்று இருந்தால் அதனை மட்டுமே பயன்படுத்தி பாருங்கள. டெக்னிக்கல் மற்றும் சோதிடத்தையும் கற்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும்போது நீங்கள் குழம்பிவிடுவீர்கள்.எதையாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு பங்குவணிகத்தில் ஈடுபட்டால் குழப்பம் இல்லாமல் வணிகம் செய்யமுடியும்.
ஒரு நாள் அனைத்து டெக்னிக்கல் ரிசல்ட்டும் இன்று மார்க்கெட் இறங்கும் என்று சொல்லுகிறார்கள். எனக்கு டெக்னிக்கலும் தெரியும் என்பதால் அப்படி தான் செல்லும் என்று கணிக்கிறது ஆனால் சோதிடத்தில் காலை 10: 47 மணிக்கு மார்க்கெட் 1000 பாயிண்ட் மேலே செல்லும் என்று சொல்லுகிறது.
நான் சோதிடத்தில் இருந்த நம்பிக்கையால் கண்டிப்பாக மார்க்கெட் ஏறபோகிறது என்பதை சொன்னேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் என் மீது இருந்த நம்பிக்கையால் அனைவரும் Buy mode க்கு சென்றார்கள். அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. சில்வர் ஆயிரம் பாயிண்ட் கொடுத்தால் வருமானம் எங்கோ போய்விடும். அன்று நான் இருக்கும் கிளை மட்டும் தான் தப்பித்தது அனைத்து கிளையும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது.
இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் சோதிடத்தை சரியாக கணித்துவிட்டால் அப்படியே நடந்துவிடும். இப்பொழுது நான் சொல்லுகிறேன் ஒரு தனிமனிதன் ஜாதகத்தை கணித்து அதற்கு பலன் சொல்லுவது கடினம் ஆனால் பங்குசந்தையை கணிப்பது எளிது துல்லியமாக இருக்கிறது.நான் மனிதர்களுக்கு பலன் சொல்லும்போது தவறுதல் நடந்திருக்கிறது ஆனால் பங்குசந்தையில் ஒரு தவறைகூட நான் செய்தது கிடையாது.
பங்குசந்தை சோதிடத்தில் சந்திரனை வைத்து கணிக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். இதனை ஏன் கணிக்கிறார்கள் என்றால் மனிதனின் மனதிற்க்கு காரகன் சந்திரன் அதனால் அவரை வைத்து கணிக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். பத்து மனிதனை ஒரு இடத்தில் அமரவைத்தால் பத்து மனிதனுக்கும் ஒரே மாதிரி எண்ணங்கள் இருக்காது. ஒவ்வொருவருக்கும் மனதில் பல மாதிரி எண்ணங்கள் தோன்றும்.
சந்திரனை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது பிற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். சந்திரனை மட்டும் தான் வைத்து கணிப்பேன் என்றால் இரண்டு நாட்களில் அக்கெளண்ட் இல்லாமல் போய்விடும். கமாடிட்டி வணிகம் உலகத்தையே சார்ந்து நடைபெறும் ஒரு வணிகம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். அதனையே சோதிடத்தில் கணிக்கவேண்டும் என்றால் சோதிடத்தில் தனி ஸ்கில் வேண்டும். என்ன தான் கம்யூட்டரில் கணித்தாலும் பலனை முடிவு செய்வது என்பது மனிதன் தான். மனிதனின் மனநிலையும் நன்றாக இருக்கும்பட்சத்தில் தான் சாத்தியப்படும்.
தொடரும்
நன்றி நண்பர்களே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
I am happy to see you started writing about this. Good luck and keep it up.
regards
-surya
வருக வணக்கம். தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Much expected topic sir. Great. Thanks a lot.
Post a Comment