Followers

Thursday, March 21, 2013

ஆன்மீக அனுபவங்கள் 79



வணக்கம் நண்பர்களே !
                     மனிதனைப்பற்றி அவனுக்குள் இருக்கும் ஆத்மாவைப்பற்றி பல பதிவுகளில் பார்த்து வருகிறோம். மேலும் பல தகவல்களை உங்களுக்கு தருகிறேன் படித்து பாருங்கள்.

மனிதன் சந்திக்கும் பிரச்சினையிலேயே மிகப்பெரிய பிரச்சினை என்றால் எது தெரியுமா? மரணம். இன்றைக்கும இந்த பிரச்சினை அதிகமாக பாதிக்கச்செய்வது யார் என்றால்? பணக்காரர்களை அதிகமாக பாதிக்கச்செய்கிறது. ஒரு பணக்காரனால் எதனையும் செய்ய முடியும்போது மரணத்தை மட்டும் கண்டு அஞ்சி நிற்கிறான். இது இப்பொழுது ஏற்பட்டது அல்ல மனிதன் எப்பொழுது வளர்ச்சி பெற்றானோ அன்று இருந்து இன்று வரை இந்த தேடல் தான் நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. 

மரணம் மரணத்திற்க்கு பின் என்ன நிகழ்கிறது என்பது மனிதன் மனிதனாக எப்பொழுது மாறினானோ அப்பொழுது இருந்து இந்த சிந்தனை அவனுக்குள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதனை வைத்து தான் இன்றைக்கு ஆன்மீகம் நின்றுக்கொண்டுருக்கிறது.

 அனைத்து மதங்களும் மரணத்திற்க்கு பின்பு இது தான் என்று சொல்லியுள்ளார்கள் அதனை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். ஏற்றுக்கொண்டவர்கள் அந்த மதத்தை பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் பகுத்தறிவோடு தேடிக்கொண்டு இருக்கிறார்கள். பல பகுத்தறிவாளர்கள் தங்கள் கண்டுபிடித்தையும் சொல்லியுள்ளார்கள். 

அனைத்து மதங்களும் சொன்னாலும் இந்து மதத்தில் இதனைப்பற்றி நிறைய சொல்லியுள்ளார்கள். இதனைப்பற்றி எனது அறிவுக்கு எட்டியதை உங்களிடம் சொல்லுகிறேன்.

ஒருவருடைய மரணம் அவர் பிறக்கும்போது நிச்சயிக்கப்படுகிறது. ஒருவன் பிறந்தாலே மரணத்தை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்துவிட்டான். அனைத்து உயிரனங்களுக்கும் இது பொதுவான ஒன்று தான். நமது உடலில் இருக்கும் ஆத்மாவிற்க்கும் பரமாத்மாவிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

நமது உடலில் இருக்கும் ஆத்மாவை ஜீவாத்மா என்று சொல்லுவோம். ஜீவாத்மா முடிவு செய்யாமல் இந்த உயிர் உடலை விட்டு போகாது. உங்களின் ஆத்மா உங்களின் உடலை விட்டுச்செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் தான் அது உங்களின் உடலை விட்டுச்செல்லும். அதுபோலவே உங்களின் ஆத்மா மட்டும் முடிவு செய்தால் போதாது அந்த பரமாத்மாவும் முடிவு செய்ய வேண்டும்.

இந்த ஆத்மாவை எடுத்துச்செல்வதற்க்கு என்று சில தேவதைகள் வருவதாக பொதுவாக அனைத்து மதங்களிலும் சொல்லியுள்ளார்கள். இது உண்மை தான் இதனை எடுப்பதற்க்கு என்றே தேவதைகள் இருக்கின்றன. அந்த தேவதைகளை பல மதங்களிலும் பல பேர்களோடு சொல்லிவருகிறார்கள். 

இந்த தேவதைகள் வந்து உயிரை எடுத்துச்சென்றால் தான் அந்த ஆத்மா மறுபடியும் பிறக்கவேண்டுமா அல்லது பரமாத்மாவிடம் ஒன்று சேரவேண்டுமா என்று முடிவு செய்யப்படும்.

ஒரு சில இடங்களில் உயிர் பலியாகும்போது அந்த ஆத்மா அந்த இடத்திலேயே நிலைப்பெற்று இருக்கிறது. அந்த ஆத்மாவின் வாழ்நாட்கள் முடிந்து பிறகு தேவதைகள் வந்து எடுத்தச்செல்லுகின்றன. இப்படி நடக்கும் என்பதை அதனின் பிறப்பிலேயே எழுதிவைத்திருக்கிறார்கள். உடலற்ற ஆத்மா அது இருக்கிறது.

உண்மையை சொல்லபோனால் ஆன்மீகத்திற்க்காக தான் உடல் தாங்கி இந்த ஆத்மா உலகத்திற்க்கு வருகிறது. ஒரு உடலை எடுத்து அந்த கடமையை செய்து முடித்தவுடன் அடுத்த உடலை அது எடுக்கிறது. இந்த ஆன்மீகபயணத்திற்க்கு பல ஆயிரம் உடல்களை அது தேடிப்பிடித்து பிறப்பு எடுக்கிறது. நாம் ஏழு ஜென்மம் என்று தான் சொல்லுவோம் ஆனால் பல ஆயிரம் ஜென்மங்கள் ஏன் பல லட்ச ஜென்மங்கள் எடுக்கிறது என்பது தான் உண்மை. இந்த மனித ஜென்மத்திலிருந்து நீங்கள் வேறு ஜென்மத்திற்க்கு சென்றுவிடகூடாது என்பதற்க்காக தான் பூர்வபுண்ணியப்பகுதியில் இவ்வளவு கத்து கத்திக்கொண்டு இருக்கிறேன்.

பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: