Followers

Saturday, June 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 93


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர் நாமக்கல்லில் இருந்து ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு கருத்தை எழுதச்சொல்லிருந்தார் வேலை அதிகமாக இருந்ததால் அதனை எழுதவில்லை தற்பொழுது உங்களின் பார்வைக்கு அந்த கருத்து

நாங்கள் இஷ்டதெய்வம் ஒன்று வைத்திருப்போம் அது எதற்கு என்றால் வரும் நபர்களுக்கு அவர்கள் கேட்கும் வேலையை செய்துக்கொடுப்பதற்க்கு இந்த தெய்வத்தை நாங்கள் வைத்திருப்போம். குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். குலதெய்வம் தான் அங்காளபரமேஸ்வரி. இஷ்டதெய்வத்தைப் பற்றி வெளியில் சொல்வதில்லை. இஷ்டதெய்வத்தை வெளியில் சொல்லகூடாது. குலதெய்வத்திற்க்கு மட்டும் தான் நாங்கள் அனைத்தையும் செய்வோம் அதாவது பூஜை படையல் எல்லாம் நடைபெறும். இஷ்டதெய்வத்திற்க்கு பூஜை செய்வது உண்டு. நைவேத்தியமாக ஒரு சிலவற்றை மட்டுமே செய்வது உண்டு.

என்னுடைய இஷ்டதெய்வத்திற்க்கு நான் பொங்கல் படைத்தே ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு ஒரு எலுமிச்சை பழம் அறுப்பதற்க்கு கூட ரொம்ப யோசித்து தான் அறுப்போம். அதற்கு பலி என்பது கொடுக்ககூடாது. என்னுடைய குருநாதர் அதிகமாக கட்டுபாடு விதிப்பது இந்த விசயத்தில் தான். ஏன் என்றால் ஒன்று கொடுத்தால் அது மீண்டும் மீண்டும் கேட்கும். அதனால் எதையும் கொடுப்பதில்லை. அந்த தெய்வம் அவ்வளவு கொடூரமானது. அது எங்களுக்கு மட்டும் தான் சாந்தமாக காட்சிக்கொடுக்கும். பிறர்களுக்கு அது எமன்போல் தான் தெரியும். 

இப்பொழுது இஷ்டதெய்வத்தை வைத்து அதிகமாக வேலை வாங்குவது கிடையாது. குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி தான் அனைத்தையும் செய்கிறது. இஷ்டதெய்வத்தை அனுப்பினால் எதிர் நபர் தாங்கமாட்டார் என்ற காரணத்தால் அனுப்பவதில்லை. குலதெய்வமான அங்காளபரமேஸ்வரியை அனுப்பியே அனைத்தையும் முடித்துக்கொள்கிறேன். அங்காளபரமேஸ்வரியையும் சாந்தமாக மாற்றி அனுப்புகிறேன்.

நாம் வைத்திருக்கும் இஷ்டதெய்வத்திற்க்கு பலி என்பது கொடுக்ககூடாது. ஒரு முறை இரத்தத்தை பார்த்துவிட்டால் பிறகு அது கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படி நம்மால் கொடுக்கமுடியவில்லை என்றால் அது நம்மையை காலிசெய்ய ஆரம்பிக்கும் அதனால் செய்வதில்லை. முடிந்தவரை எதுவும் கொடுக்காமல் செய்வது நல்லது.

நீங்கள் மந்திரபயிற்சி செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேவையில்லாமல் எலுமிச்சை பழம் கூட அறுக்ககூடாது. நாங்கள் மிகவும் கடினமான வேலையாக இருந்தால் எலுமிச்சை வைத்து செய்வோம் அப்பொழுது குங்குமத்தை அதில் தடவி செய்யமாட்டோம். ஏன் என்றால் அது இரத்த காவு போல் எடுத்துக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிடும். 

இந்த விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.எதுவும் கொடுக்காமல் வேலையை வாங்குங்கள் தாராளமாக செய்யும்.நைவேத்தியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பதும் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: