வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்க்கலாம். தனசு லக்கினத்தை உடைய ஜாதகம். லக்கினாதிபதியாகிய குரு ஒன்பதாவது வீட்டில் போய் அமர்ந்து இருக்கிறார். குரு அமர்ந்த வீடு சிம்மம்.
குரு சிம்மத்தில் செல்லும் நட்சத்திரம் மகம். மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம். குருவிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை கிடைக்கிறது என்று பார்த்தால் மூன்றாவது வீட்டில் அமர்ந்து செவ்வாய் தன்னுடைய ஏழாவது பார்வையில் பார்க்கிறார். குருவிற்க்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது.
லக்கினம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். லக்கினம் தனுசு லக்கினம். லக்கனத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். குருவின் வீட்டில் சுக்கிரன் அமர்ந்தாலும் அவரின் சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்து சென்றுககொண்டு இருக்கிறது. லக்கினத்திற்க்கு குருவின் பார்வை கிடைக்கிறது. சனியின் பத்தாவது பார்வையும் லக்கினத்திற்க்கு கிடைக்கிறது. சனி செல்லும் நட்சத்திரம் உத்திரட்டாதி. சனியின் சொந்த நட்சத்திரத்தில் செல்லுகிறார்.
லக்கினத்திற்க்கு பாவகிரகங்களின் பார்வை அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம்.இவரின் உடற்கூற்றைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் நல்ல அழகாக இருப்பார். குள்ளமாக இருப்பார். தன்னை அலங்கரித்துக்கொள்வதில் ஈடுபாடுக்கொண்டவர்.
குடும்ப ஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்கிறார். அதன் அதிபதி நான்காவது வீடு என்னும் சொல்லக்கூடிய சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதால் பிரச்சினையை கிளப்புவார் என்று நாம் சொல்லமுடியாது. இவரின் குடும்பத்தை இவரின் தந்தைதான் நடத்திருக்கிறார்.
அப்ப இவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?
இவர் ஊர் சுற்றி திரிந்துக்கொண்டுருந்திருக்கிறார். குடும்பத்தை கவனிக்காமல் இருந்துக்கிறார் அதற்கு காரணம் குடும்ப ஸ்தான அதிபதி சனி நான்காவது வீ்ட்டில் அமர்ந்திருப்பது அதனோடு ராகுவும் சேர்ந்து இருக்கிறார். மூன்றாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் அமர்ந்திருக்கிறது. ஒரு ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது தைரியஸ்தானம் என்பதால் அதில் செவ்வாய் அமர்ந்ததால் இவர் ஊர் சுற்றி இருக்கிறார்.
லக்கினத்தில் சுக்கிரன் சம்பந்தப்பட்டதால் இவர் காமசுகத்திற்க்கு அதிகமாக ஈர்க்கப்படுவார்.அது தான் உண்மையான செய்தி. நான்காவது வீட்டில் சனியும் மற்றும் ராகுவும் சேர்ந்து இருப்பதால் சுகஸ்தானம் கெட்டது என்று சொல்லவேண்டும். இவரின் தாயார் இளம்வயதில் இறைவனடி போய் சேர்ந்துவிட்டார்.
ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் வீடு பாதிக்கப்பட்டால் அனைத்தையும் அனுபவிக்காமல் செய்து விடும். இவர் தான் நல்ல அனுபவித்திருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். குடும்பத்தில் எத்தனையோ சுகங்கள் இருக்கின்றன அனைத்தையும் அனுபவிக்கவிடாமல் செய்திருக்கிறது அல்லவா அதனை தான் சொன்னேன்.நான்காம் இடமான சுகஸ்தானம் கெட்டால் அனைத்து சுகத்தையும் மூட்டை கட்டி வைக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும்.
எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நான்காவது வீடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிடவேண்டும். அந்த வீடு நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர் எப்படியும் நன்றாக வாழ்வார் என்று சொல்லிவிடலாம். இந்த ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதியான குரு ஒன்பதாவது வீட்டில் இருந்தாலும் இவர் சுகத்தை தேடி போனது வெளியில் தானே தவிர தன்னுடைய வீட்டில் இருந்து அனுபவிக்கவிடாமல் சனியும் ராகுவும் செய்துவிட்டார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment