வணக்கம் நண்பர்களே!
பல பேர் என்னை சந்திக்கும்பொழுது என்ன சொல்லுகிறார்கள் என்றால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தான் கேட்கிறார்கள். நான் யாருக்கும் எனக்கு தெரிந்தவரை எதும் தவறு செய்யவில்லை ஆனால் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்பார்கள்.
ஒரு மனிதன் முதன் முதலில் ஏமாற்றதை அடையும்பொழுது அவனால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. புலம்புகிறான். ஒருவனுக்கு அவனுக்கு நடைபெறும் நன்மை தீமைகள் அவனுடைய முநதைய ஜென்மங்களின் கர்மா வினையை சார்ந்து தான் நடைபெறுகிறது. இந்த ஜென்மத்தில் நடைபெறும் சில தவறுகள் கூட அவனுக்கு தண்டனை தருவது உண்டு. பெரும்பாலும் அவன் அவன் செய்யும் தவறுகள் இந்த ஜென்மத்திலேயே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இளமையில் அதிகமாக ஆட்டம் போடுகிறோம் எதனால் ஆடுகிறோம் என்பது தெரியாமல் ஆடுகிறோம். அதன் வினை காரணமாக கூட நம்மை பழிவாங்க ஆரம்பித்துவிடுகிறது. பணம் இருந்தால் கூட பணத்திமிரு காரணமாக கூட ஆட ஆரம்பிக்கிறோம். எல்லா ஆட்டத்திற்க்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் அல்லவா. அதன் கடவுள் முற்றுப்புள்ளி வைக்கிறார்.
ஒரு சிலருக்கு தன் மனைவியே பெரும் பிரச்சினையாக இருக்கும். அவர்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தை பார்த்தால் மனைவி வழியில் பிரச்சினையை சந்திக்கவேண்டும் என்று இருக்கும். அவனின் மனைவி அவனை ஒரு வழி செய்யாமல் விடுமாட்டார். ஒரு சிலருக்கு பக்கத்துவீட்டுக்காரன் வழியாக தொல்லை அனுபவித்துக்கொண்டு இருப்பான். அவனுக்கும் இவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது ஆனால் அவன் பிரச்சினை கொடுத்துக்கொண்டு இருப்பான்.
ஒரு சில பிரச்சினை எங்கு இருந்து வருகிறது என்று தெரியாது. பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். அடி என்றால் அப்படி ஒரு அடி வந்துக்கொண்டு இருக்கும். அதுவும் நாம் செய்த வினைகள் காரணமாக தான் வரும். நமக்கு தெரியாமலே நம்மால் பிறர்க்கு பிரச்சினை கொடுத்திருப்போம் அதனால் இப்படி பிரச்சினை வரும். அனைத்தையும் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு அவன் காப்பாற்றுவான் என்று இருக்கவேண்டியது நமது வேலை.
நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று இருக்கின்ற கோவிலுக்கு எல்லாம் சென்று வணங்கி வரவேண்டியது நமது கடமை.கடவுள் மேல் நம்பிக்கை வைத்து தான் இந்த பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்கமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment