வணக்கம் நண்பர்களே!
பூஜை செய்வதில் இரண்டு உண்மைகள் மறைந்துள்ளன. ஒன்று அதற்குரிய சடங்குகள் சடங்குகள் மூலம் இறைவனின் அருளை வேண்டுவது இறைவனின் புகழை அர்ச்சிப்பது. மற்றொன்று இறைவனின் குணங்களை உயரத்தி உயர்த்திப் பேசி அவனின் அருள் வேண்டுவது இறைவனை நினைத்து நினைத்து அர்ச்சிக்க நாம் அவனாக மாறிவிடுகிறோம்.
அவனது குணங்களும் நமக்கு வந்து விடுகின்றன குழந்தை அதன் தாயாரைக் கூப்பிடுவது போல் பக்தன் இறைவனை பூஜையின் மூலம் ஆராதனையின் மூலம் பஜனையின் மூலம் கூப்பிடுகிறான். குழந்தை நலம் காணும் தாயைப்போல இறைவனும் தனது குழந்தைகளுக்கு நலம் தருகிறான்.
இறைவனின் புகழைப் பாட பாட பணிவு ஏற்படுகிறது. இறைவனை உயர்த்திப் பேசி தான் தாழ்வு பெறுவதால் அகங்காரம் அழிந்து விடுகிறது. மன உளைச்சல் மனஅழுத்தம், மனக்கலக்கம், பாதிப்புகள், குற்ற உணர்வுகள், தான் என்ற அகங்காரம் தனது என்ற பெருமை பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சகம் எல்லாமே அகங்காரம் தான் . இவை எல்லாமே சுருங்க மனம் தெளிவு பெறுகிறது. பூஜையும் ஆராதனையும் செய்து எல்லாம் நீயே நான் ஒன்றும் இல்லை என்று சொல்ல ஆணவம் அடங்கிவிடுகிறது.
எல்லாம் அறிந்த முழுமைப் பொருளுக்குப் புகழ்ச்சி வேண்டுமா என்று கேள்வி கேட்கலாம் இறைவனுக்குப் புகழ்ச்சியோ பூஜையோ பஜனையோ தேவையில்லை. மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதற்க்கு இறைவனுக்குப் பூஜையும் ஆராதனையும் செய்கிறான் என்பது தான் உண்மை.
முதல் நிலையில் இருப்பவனுக்கு அனைத்தையும் செய்து விட்டு மனதை பக்குவப்படுத்த வேண்டும் அதன் பிறகு தானாகவே மனம் அதற்கு பக்குவப்பட்டுவிடும்.முதலிலேயே நான் எதுவும் இல்லாமல் நேரிடையாக தியானம் செய்கிறேன் என்று இறங்கினால் அவன் தோல்வியை தான் தழுவமுடியும். நீங்களும் முதலில் எப்படி பூஜை செய்வது என்பதை கற்றுக்கொண்டு படிப்படியாக இறைவனை அடையமுயற்சி செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment