Followers

Wednesday, June 26, 2013

தியாகம்


வணக்கம் நண்பர்களே!
             நான் எழுதுவது பல நேரங்களில் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் அனைத்தும் உண்மை தான் என்பது நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கும்பொழுது தெரியவரும். அனுமானுஷ்ய விசயங்கள் அதிகமாக இருப்பதால் அனைத்தும் வேடிக்கையாக இருக்கும். இதனை கற்பதற்க்கு என்றே நான் வாழ்க்கையில் பல இழந்திருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு எடுத்த விசயங்கள் ஒவ்வொன்றும்.

சென்னையில் இருந்துக்கொண்டு வேலைக்கு போகாத ஒரு ஜீவன் என்றால் அது நானாக தான் இருப்பேன். ஒரு சிலர் மாதங்கள் மற்றும் ஒரு வருடங்கள் இருந்திருப்பார்கள் ஆனால் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். அறையிலேயே தங்கியிருப்பது மட்டுமே எனது வேலையாக இருந்தது. தனிமையில் அமைதியாக இருந்து அனைத்தையும் பெற்றேன். ஒரு ஆன்மிகவாதி என்பவன் இரவை அதிகமாக பயன்படுத்தவேண்டும். இரவு நேரத்தில் ஆன்மீகபயிற்சி செய்வதற்க்கு உகந்த நேரம்.

ரோகி போகி யோகி மூவரும் இரவில் தூங்கமாட்டார்கள் என்று படித்திருக்கிறேன். ரோகி என்பவன் நோயுடன் போராடி இரவில் தூங்கமாட்டான். போகி என்பவன் இரவில் அவனது போகத்திற்க்காக நாடி செல்வதால் அவனும் தூங்கமாட்டான். யோகி அவனின் பயிற்சிக்கும் இரவு தான் உகந்தது என்று தூங்கமாட்டான்.

அதிகமான தனிமையில் இருந்து அனைத்தையும் பெறவேண்டும். தனிமையில் இருந்துக்கொண்டு கற்பனை செய்துக்கொண்டு இருக்ககூடாது. கற்பனை செய்தால் அது ஒரு தனி உலகமாக மாறிவிடும். எதுவும் செய்யாமல் இருத்தலே ஆன்மீக சாதனை.

இது ஒரு கடினமான செயல் தான் என்ன செய்வது ஒன்றை பெறுவதற்க்கு தியாகம் செய்தால் மட்டுமே சாத்தியப்படும். நீங்கள் தியாகம் செவ்வதற்க்கு தயார் என்றால் ஆன்மீகம் உங்களுக்கு வசப்படும். தியாகம் செய்யாமல் எதுவும் வராது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: