Followers

Wednesday, June 12, 2013

நேரம் : பகுதி 1


வணக்கம் நண்பர்களே !
                    தினமும் ஒவ்வொரு நேரத்தையும் இது தான் செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் பட்டியல் இட்டு வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள் அதனை கடைபிடிக்கும்பொழுது உங்களின் வாழ்க்கை உயரும். ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

அதிகாலை 3:37 மணி முதல் 6:00 மணி வரை

இது மிகவும் சாத்வீகமான நேரம். யாகம் செய்வதற்க்கு மற்றும் காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு உகந்த நேரம். பஞ்சபூதத்தில் ஆகாயத்தை குறிக்கும் நேரம் இது. ஆகாயம் என்பது வெட்டவெளி. இந்த வெட்டவெளியைப் பற்றி சிவமே பகுதியல் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அமுதம் போன்ற நேரம் இது. ஆத்மாவிற்க்கு பலத்தை அதிகப்படுத்தும் நேரம் இது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் தூங்ககூடாது. தியானம செய்வதற்க்கு நல்ல நேரம் இதுதான். உங்களுக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த நேரத்தில் உடல்உறவை வைத்துக்கொண்டால் நல்லது.

காலை 6:01 மணி முதல் 8:24 மணி வரை

காலை 6:00 மணிக்கு குளிர்ச்சியான நேரம். அஸ்திவாரக்கல் நாட்ட சிறப்பான நேரம். வீடு கட்ட அடிக்கல் நாட்டினால் குடியிருப்பவரின் மனம் குளிர்ந்து இருக்கும். இந்த நேரத்தில் நட்சத்திர தோஷம், திதி தோஷம், கிழமை தோஷம் எதுவும் கிடையாது, தியானம் ,காயத்ரி ஜபம், ஆசனம், பிரணாயாமம் ஆகியன செய்ய உத்தம நேரம்.

காலை 8:25 மணி முதல் 10:48 மணி வரை

தான தர்மம் செய்வதற்க்கு இந்த நேரம் உகந்தது. இந்த நேரத்தில் தானதர்மம் செய்யும்பொழுது உங்களுக்கு புண்ணியம் அதிகமாக வரும். இந்த நேரத்தில் நீங்கள் எப்படியாவது பிறர்க்கு தானம் செய்திடவேண்டும். இந்த நேரத்தில் தானம் செய்யும்பொழுது புண்ணியம் இருமடங்காக உயரும்.

காலை 10:49 மணி முதல் மதியம் 1:12 மணி வரை

இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டிய நேரம் இது. உழைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் சாப்பிடவேண்டும். முதியோர் கூட இந்த நேரத்தில் சின்ன வேலையாவது செய்ய வேண்டும். வேலை செய்யாமல் இருத்தல் கூடாது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment: