Followers

Saturday, June 1, 2013

கரகாட்டம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னடா ஆன்மீக விசயங்களை சொல்லிக்கொண்டு வந்தவர். திடீர் என்று கரகாட்டம் பக்கம் சென்று விட்டார் என்று நினைக்கவேண்டாம். இப்பொழுது உள்ள கோவில்களில் கரகாட்டம் இல்லாமல் திருவிழாவே கிடையாது என்ற நிலை வந்துவிட்டது. தென்தமிழகத்தில் கரகாட்டத்திற்க்கு முக்கியதுவம் அதிகமாக இருக்கும்.

தஞ்சாவூர் பகுதியில் இருந்து இந்த பதிவை படிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக கரகாட்டத்தைப்பற்றி தெரியும். மாரியம்மன் கோவில்களில் போட்டி கரகாட்டம் இல்லாமல் திருவிழாக்கள் நடைபெறாது. இப்பொழுது நடைபெறும் கரகாட்டங்களை பெண்கள் பார்க்கமுடியாது அந்தளவுக்கு மோசமாக போய்விட்டது. கரகாட்டங்கள் கோவில்களில் நடைபெறுவதற்க்கு உண்மையான காரணம் என்ன என்றால் அந்த காலத்தில் மழை வேண்டி காவிரி ஆற்றி்ல் இருந்து தண்ணீரை குடமாக எடுத்து தலையில் வைத்துக்கொண்டு கோவில் இருக்கும் இடம் வரை ஆடி பாடிக்கொண்டு வந்து அந்த தண்ணீரை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

மாரியம்மன் என்பது மழையை தருபவள். அவளின் கருணையால் மழை பொழியும். முப்போகம் விளையும். மாரியம்மன் கோவில் தஞசாவூர் பகுதியில் அதிகமாக இருக்கும். அங்கு எல்லாம் கோவில்களும் இருக்கின்றது இருந்தாலும் ஒவ்வொரு கிராமத்திலும் மாரியம்மன் இல்லாமல் இருக்காது அதற்கு காரணம் மழையை தருபவள். அவர்களின் பிழைப்பிற்க்கு வழிகாட்டுபவள் என்ற காரணத்தால் தான் மாரியம்மனுக்கு அங்கு அதிகமான செல்வாக்கு.

இப்பொழுது தஞ்சாவூர் பகுதியில் ஒருபோகம் விளைவதற்க்கே தண்ணீர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கு காரணம் மாரியம்மனை குற்றம் சொல்லகூடாது. கரகாட்டம் என்று யூ டியூபில் டைப் செய்து பாருங்கள் அப்பொழுது தெரியும் உங்களுக்கு ஏன் மழை இல்லை பெய்ய மாட்டேன்கிறது என்று உங்களுக்கு புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: