Followers

Thursday, June 6, 2013

சிவமே: பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் ஒருவர் சிவமே பகுதியை நிறுத்திவிட்டீர்கள் ஏன் என்று காரணம் தெரியலாமா என்று கேள்வி அனுப்பியுள்ளார். சிவமே பகுதியில் பல விசயங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். சிவத்தைப்பற்றி அவரின் புகழ் என்ன என்பதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்று இருந்தேன். 

நமது தளத்திற்க்கு வரும் ஆன்மீக பெரியவர்கள் எல்லாம் படிப்பது அனைவரும் இளைஞர்கள் அவர்கள் இலலறத்தில் இருந்து்க்கொண்டு ஆன்மீகத்தை நாடவேண்டும். இளைஞர்களின் வாழ்க்கை இப்பொழுது அதிக வெறுப்பு தன்மை வந்துவிட்டது. அவர்கள் இதனை எல்லாம் படித்துக்கொண்டு திருமணம் செய்யாமல் சந்நியாசியாகி விடுவார்கள். அதனால் முழுவதையும் எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் சிவமே பகுதியை நிறுத்தினேன். பல பெற்றோர்களும் கேட்டுக்கொண்டதால் அதனை நிறுத்தினேன். 

அவர்கள் நினைப்பது போல பல இளைஞர்கள் என்னை தொடர்புக்கொண்டு அதற்கு வழி எல்லாம் சொல்லுங்கள் நாங்கள் ஆன்மீகவாதிகளாக மாறிவிடுகிறோம் என்று சொன்னார்கள். பல பெண்கள் எல்லாம் இல்லறவாழ்க்கையில் இருந்து கொண்டு ஆன்மீகத்தில் இருக்கமுடியாது அதனால் நாங்களும் ஆன்மீகவாழ்க்கை வாழ வேண்டும் எங்களுடைய கர்மாவை தீர்த்துக்கொண்டு அந்த சிவத்திடம் செல்லவேண்டும்  என்று சொன்னார்கள்.

இதனை எல்லாம் பார்த்த பிறகு தான் இது பிரச்சினை எழுப்பும் என்று நிறுத்தினேன். அப்பொழுது நினைத்தேன் நாம் ஒரு பிளாக்கை எழுதுக்கொண்டு இரு்க்கிறோம் அதில் 350 பேர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பாதி பேர் தொடர்புக்கொண்டு இதனை கேட்கும்பொழுது நமது மக்களுக்கு நல்லதை கற்றக்கொடுக்க ஆட்கள் இல்லை என்று தெரிகிறது என்று நினைத்தேன். இன்றைய தேதியில் இருக்கும் குரு எல்லாம் ஏதோ கண்டதை சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது அல்லது அவர்கள் சொல்லிக்கொடுக்கும் விசயங்கள் சாதாரண மக்களுக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.

எதனையும் விட்டுவிட்டு ஒடினால் அந்த வாழ்க்கை சுகம் தரும் என்று நினைத்தால் அது தான் முட்டாள்தனமானது. சிவதன்மை உலகவாழ்வுககு எதிரியல்ல. சிவம் குடும்ப வாழ்வுக்கு எதிரியல்ல அனைத்தையும் துறந்து ஒடிவிடுவதுடன் அல்ல. வெளியுலகத்தை விட்டு ஓடுவதால் ஒருவரும் மாறுவதில்லை. இல்லறவாழ்க்கையில் வெறுப்பு அடைந்து காட்டுக்கு சென்றால் என்ன நடக்கபோகிறது அங்கும் வெறுப்பு தான் வரும் அதனால் நீங்கள் இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டே சிவத்தை அடைய முயற்சி செய்யுங்கள். 

பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரமும் தேவையான ஒன்று. இன்றைய காலகட்டத்தில பெண்கள் சுதந்திரமாக இருப்பது போல் காட்டுக்கிறார்களே தவிர உண்மையான சுதந்திரத்தை கொடுப்பதில்லை அவர்களும் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினையுங்கள். உடனே ஆண்கள் சொல்லுவார்கள் பெண்கள் தானே ஆன்மீகவாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனலாம். வீட்டிற்க்குள்ளே ஆன்மீகவாழ்க்கை மட்டும் இல்லாமல் அவர்களின் வெளியுலகத்தில் உள்ள ஆன்மீகத்தோடும் தொடர்புக்கொள்ள வேண்டும் அப்பொழுது அவர்களும் அந்த சிவத்தை நோக்கி செல்லமுடியும்.

பார்க்கலாம்..

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: