வணக்கம் நண்பர்களே!
ஆன்மீக பயணங்கள் செல்லும்பொழுது நண்பர்கள் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்லுவதால் உள்மனதில் தேங்கி கிடக்கும் ஆன்மீககருத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றை உங்களுக்கும் பங்கிட்டு தரமுடிகிறது. திருவண்ணாமலை செல்வதால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்று அந்த பயணத்தில் கேட்கப்பட்டது.
அனைத்து கோவிலு்க்கும் திருவண்ணாமலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திருவண்ணாமலையில் அஷ்டதிக்க பாலகர்கள் வணங்கிய தலம். இதனை சுற்றி நாம் வணங்கும்பொழுது அஷ்டதிக்கிலும் உள்ள தெய்வத்தின் பலம் நமக்கு கிடைக்கிறது. இதனால் என்ன நமக்கு பயன் என்பதை வேறு ஒரு தகவலுடன் நாம் பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினை என்று வந்தால் அவர்களுக்கு பல பரிகாரங்களை நாங்கள் சொல்வது உண்டு. அப்படியும் அவர்களுக்கு சரியில்லை என்றால் அவர்களை அவர்கள் இருக்கும் வீட்டிலிருந்து நான்கு திசையில் இருக்கும். அடுத்த ஊர்களுக்கு சென்று மஞ்சள் துணியை அணிந்துக்கொண்டு பிச்சை எடுக்க வைத்து அந்த பணத்தை கொண்டு கோவில்களில் அன்னதானம் செய்ய சொல்லுவோம். அப்படி செய்யும்பொழுது நான்கு திசை அதிபர்களின் பலம் கிடைக்கும். நான்கு திசை அதிபர்களின் பலம் கிடைப்பதால் அதன் பிறகு பரிகாரத்தை செய்யும்பொழுது எளிதில் அந்த காரியம் வெற்றி அடையும்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவரை வெளியில் பிச்சை எடுக்கவைப்பது கடினமான ஒன்று. ஏன் என்றால் பிச்சை எடுக்க வைத்தால் அவர்களின் மனம் அதற்கு ஏற்றுக்கொள்ளாது. அதுவும் நான்கு ஊர்களுக்கு சென்று வருவது பிச்சை எடுக்க சொன்னால் கடினமானது. அதனால் அவர்களை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சொல்லுவோம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லுவதால் நமக்கு திசை அதிபர்களின் பலம் நன்றாக கிடைக்கும். அதன் வழியாக ஏகாப்பட்ட காரியங்களை நாம் சாதிக்கமுடியும். சோதிடத்தைப்பற்றி நாம் நிறைய படிக்கலாம். ஆனால் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் தோஷத்தை குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதனை நமது முன்னோர்கள் மறைவாக வைத்துவிட்டு சென்று இருக்கிறார்கள் அதனை நாம் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment