Followers

Sunday, June 9, 2013

சக்தியின் கருணை


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று பாண்டிச்சேரி சென்றுவிட்டு திருவக்கரை அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். கடந்த முறை சென்றபொழுது அம்மனை பார்ப்பதற்க்கு கஷ்டமாக இருந்தது என்று சொல்லிருந்தேன். பார்ப்பதற்க்கு பணம் வாங்குகிறார்கள் என்று சொல்லிருந்தேன். பாண்டிச்சேரி நண்பர் அம்மனிடம் மிகஅருகில் அழைத்துக்கொண்டு சென்று காண்பித்தார். கண்க்கொள்ள காட்சியாக அமைந்தது.  15 நாட்களில் அம்மன் என்னை மிகஅருகில் தரிசனம் செய்ய வைத்திருக்கிறாள் என்றால் அவளின் கருணையை என்ன என்று சொல்லுவது என்று எனக்கு தெரியவி்ல்லை.

பொதுவாக ஒரு கிரகம் நேர்வழியில் சென்றாலே அது மிகப்பெரிய பலமாக இருக்கும். வக்ரகதியில் செல்லும்பொழுது அதிகமான பலம் பெற்றவிடும் தன்மை வக்கிரகிரத்திற்க்கு உண்டு. ஒரு காளியின் சக்தி அதிக பயங்கரமானது அதுவும் வக்ரகாளியாக இருப்பவள் எப்பேர்பட்ட சக்தியுடன் இருப்பாள் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. 

வக்ரகாளியின் தரிசனம் செய்யவே இன்னமும் பல ஜென்மங்கள் எடுத்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். உலகத்தின் மிகப்பெரிய சக்தி நம்மை ஆசிர்வதிக்கிறது என்றால் எப்பேர்பட்ட பாக்கியம் நாம் பெற்று இருக்க வேண்டும். என்னுடைய ஆசை என்ன என்றால் இந்த சக்தியின் பார்வையில் நீங்களும் படவேண்டும் என்பது மட்டுமே. வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்கள் அங்கு சென்று அம்மனை பார்த்துவிட்டு வாருங்கள்.

நான் ஒரு கோவிலைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் அவ்வளவு எளிதில் சொல்லமாட்டேன். ஒரு சில கோவிலை மட்டுமே உங்களுக்கு சொல்லுவேன். அதனால் நீங்கள் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டும்.இந்த அம்மனைப்பற்றி சொல்லியுள்ளேன் நீங்கள் சென்று வணங்கி வாருங்கள்.

நண்பர்களே நாளை முதல் மந்திரப்பயிற்சி செய்பவர்கள் தொடங்கலாம். புதியதாக மந்திரப்பயிற்சி செய்பவர்கள் நாளை முதல் என்னை தொடர்புக்கொண்ட பிறகு ஆரம்பிக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

5 comments:

KJ said...

Good afternoon sir..

rajeshsubbu said...

வணக்கம் KJ. நலமா?

KJ said...

Vanakkam sir. Kadavul punniyathil Nalamaga ullen.

Anonymous said...

எங்கள் நீண்ட நாளைய கனவு .
தங்களின் பதிவும் தூண்டுகோலாக உள்ளது.
நன்றி !

rajeshsubbu said...

//*ஸ்ரவாணி said...
எங்கள் நீண்ட நாளைய கனவு .
தங்களின் பதிவும் தூண்டுகோலாக உள்ளது.
நன்றி ! *//

வணக்கம் கண்டிப்பாக சென்று வணங்கி வாருங்கள்.