வணக்கம் நண்பர்களே !
நமது கலாசாரத்தில் மேற்கத்திய கலாசாரம் வந்துவிட்டதால் அவர்களின் தாக்கம் நமது நம்பிக்கையான மதத்தின் மேலும் வந்துவிட்டது. அதனால் தான் பல கேள்விகள் நமது கடவுளை பார்த்து கேட்க தோன்றுகிறது.
மேற்கு நாடுகளில் சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் மேறகத்திய பிலாஸபி இருக்கிறது கடவுள் என்றால் என்ன என்பதை அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் சிந்தனை செய்கிறார்கள் நம் நாட்டில் ஆராய்ச்சி செய்வதில்லை, கடவுளின் தரிசனம் எப்படி கிடைக்கும் என்று தான் பார்ப்பார்கள். நீங்களே பாருங்கள் நமது ஆட்களை பார்த்தால் நான் அம்மனை பார்க்கவேண்டும் ,சிவனை பார்க்கவேண்டும், பெருமாளை பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அம்மன் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதி்ல்லை. அம்மனை பார்க்கவேண்டும் என்று எண்ணுவான். ஏன் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறான். கண் உள்ளவன் பார்க்கதான் நினைப்பான்.
குருட்டு மனிதர்களே சிந்தனை செய்கின்றனர் கண்கள் கொண்டவர்கள் சிந்தனை செய்வதில்லை என்று ஒஷோ சொல்லுவார். இது உண்மை தான். ஒருத்தர்க்கு திருமணம் செய்யவேண்டும் என்று சொன்னவுடன் என்ன நினைப்பார். அவர் திருமணத்தை பற்றி சிந்திப்பான். திருமணம் எப்படி நடக்கவேண்டும். மனைவியுடன் எப்படி இருக்கவேண்டும் என்று அனைத்தையும் சிந்தித்துக்கொண்டே இருப்பான். இந்த சிந்தனைக்கு தகுந்தவாறும் நடைபெறலாம் தவறாகவும இருக்கலாம். கண் உள்ளவன் நேராக திருமணம் செய்வான் அனைத்தையும் கண்முன்பே பார்ப்பான் அமைதி அடைந்துவிடுவான். சிந்தனை செய்பவனின் செயல்பாடு வில்லங்கமாக ஒரு நேரத்தில் மாறிவிடும்.
குருட்டு தனமாக இருப்பவன் தான் அம்மனாவது சிவனாவது என்று சிந்தித்துக் கொண்டிருப்பான். சிந்தனை என்பது ஒரு கடலை அலையை போன்றது தெளிவற்ற ஒன்று அதில் எதுவும் வராது. சிந்தனை என்பது ஒரு நோய். சிந்தனை இல்லாமல் இருக்கின்ற மனமே அம்மன் வரும் சிவனும் வரும். சிந்தனையற்ற மனத்திற்க்கு என்று வருகிறீர்களோ அன்று உங்களுக்குள் கடவுள் வந்துவிட்டார் என்று அர்த்தம். சிந்தனைகள் இருக்கும் இடத்தில் தர்க்கங்கள் வளருகின்றன தரிசனம் ஏற்படும் இடத்தில் யோகம் வளருகிறது. யோகம் வளர வளர கடவுளின் தரிசனத்தை காண்கிறீர்கள்.
ஆயிரம் புத்தகத்தை வைத்து படித்தாலும் ஆன்மீகத்தை உணரமுடியாது. எதுவும் அற்ற நிலையில் ஆன்மீகத்தை உணரலாம். சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட்டுவிட்டால் போதுமானது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment