Followers

Sunday, July 14, 2013

ஆன்மீக அனுபவங்கள் 101


வணக்கம் நண்பர்களே !
                     ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்க்கு என்று பல சேவைகளை சொன்னாலும் ஒரு சில தகவலை உங்களிடம் சொல்லாமல் இருந்துவிட்டேன். அந்த தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள இந்த பதிவு.

நாம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்வோம். கோவிலுக்கு செல்லும் வழியில் ஏழை எளிய மக்கள் இருப்பார்கள் அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்களுக்கு உதவி விட்டு சாமியை தரிசனம் செய்ய செல்லுங்கள். கோவிலில் முடிந்தளவு சுத்தமாக இருக்க உதவுங்கள் நீங்கள் வாங்கிக்கொண்டு செல்லும் பொருட்களில் தேவையற்ற பொருளை அதற்கு என்று இருக்கும் குப்பை தொட்டியில் மட்டும் போடுங்கள். கோவிலில் தரும் விபூதி குங்குமம் போன்றவற்றை உங்களின் பயன்பாட்டிற்க்கு பிறகு மீதி உள்ளவற்றை சுவற்றின் ஓரத்தில் போடாமல் அதற்கு என்று உள்ள பாத்திரத்தில் போடுங்கள்.

அன்னதானம் சாப்பிட்டபிறகு அதற்கு என்று உள்ள தொட்டியில் மட்டும் போடுங்கள். கைகளை அங்குள்ள சுவற்றில் தடவி அசுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் வணங்கும் கோவில் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது சாமியை மட்டும் வணங்கவேண்டும் என்று செல்ல வேண்டியதில்லை. அங்கு இருக்கும் தேவையற்ற பொருட்களை எல்லாம் அகற்றலாம். நீங்கள் கோவிலுக்குள் செல்லும்பொழுது உங்களின் கண்களில் படும் தேவையற்ற பேப்பரை கூட எடுத்து குப்பை தொட்டியில் போடலாம்.

நான் கோவிலுக்கு தனியாக செல்லும்பொழுது சுத்தம் செய்வது உண்டு. நான் கூட நினைத்தது உண்டு பல நண்பர்களை அழைத்துக்கொண்டு கோவில்களை சுத்தம் செய்யலாம் என்று நினைத்தேன். நான் சாமி கும்பிடலாம் என்று கூப்பிட்டால் கூட வராத நண்பர்கள் எப்படி இதற்க்கு எல்லாம் வருவார்கள் என்று நினைத்து அதனை விட்டுவிட்டேன்.

நீங்கள் தினமும் செல்லும் கோவிலில் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சில கோவில்களில் வரிசையாக நின்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து இருப்பார்கள். நம் ஆள் இடையில் போய் நிற்பார்கள் அது தவறு. சாமியை தரிசனம் செய்ய போவதை நமது கர்மாவை கரைக்க நேர்வழியில் சென்றால் மட்டுமே அனைத்தும் சாத்தியம். நான் பல பேர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் வீட்டில் இருப்பது போல் விரைத்துக்கொண்டு அடுத்தவர்களை பயமுறுத்தி நீ அப்படி நில்லு எனக்கு மறைக்குது என்று சண்டைபோட்டுக்கொண்டு இருப்பார்கள். அதனை எல்லாம் தவிர்க்க பாருங்கள்.

உங்களின் வீடுகளுக்கு அருகில் கோவில்கள் இருக்கும். அப்படி இருக்கும் கோவில்களில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பாருங்கள். அப்படி நடைபெறவில்லை என்றால் எதனால் நடைபெறவில்லை என்று பாருங்கள். பல கோவில்கள் பணம் இல்லாத காரணத்தால் பூஜைகள் நடைபெறுவதில்லை. உங்களால் அந்த கோவிலுக்கு பூஜை செய்யவதற்க்கு பணம் கொடுக்கமுடியமா என்று பார்த்து அதற்கு உதவி செய்யுங்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும். 

இதனையும் நீங்கள் கடைபிடிக்கும்பொழுது உங்களின் வாழ்க்கை வளமாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...

காலத்திற்கேற்ற பரிகாரங்கள் தேவையே .
அனைத்து வித சுத்தத்திற்கும் சமுதாய நலனிற்கும்
ஏற்றவையாக இருப்பதே தற்போதைய ஜோதிட
பரிஹார வழிமுறையாக இருக்க .முடியும் .
அதை நீங்கள் அழுத்தமாக உணர்த்தி இருப்பது சிறப்பு .படங்கள் வெகு அழகு .

rajeshsubbu said...

நன்றி ஸ்ரவாணி