வணக்கம் நண்பர்களே!
இசையின் வழியாக எளிய வழியில் கடவுளை அடையமுடியும். இதனைப்பற்றி பழைய ஆன்மீக அனுபவங்களின் நான் எழுதியுள்ளேன்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு இசைகருவியை வைத்திருக்கிறார்கள். அந்த இசைக்கருவியை நாம் வாசிக்கும்பொழுது அந்த கடவுள் அந்த இடத்திற்க்கு வருகிறார் என்ற நம்பிக்கை உள்ளது. இசைக்கு மயங்காத உயிர் கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்கள் எந்த ஒரு தியான மையத்திற்க்கு போனாலும் அங்கு இசையை வைத்து தியானத்தை நடத்துவார்கள். இசையால் எளிதில் மனது வயப்படும். செல்லும் இடத்திற்க்கு அழைத்துச்செல்லும் என்ற காரணத்தால் அப்படி நடத்துக்கிறார்கள்.
நமது இந்திய இசை பெரும்பாலும் தியானத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். மேற்கித்திய இசை காமத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். பெரும்பாலும் மக்கள் இளம்வயதில் மேற்கித்திய இசைக்கு அடிமையாகிவிடுவார்கள். முப்பது வயதிற்க்கு மேல் இந்திய இசையின் மீது நாட்டம் அதிகம் ஆகும்.
இளம்வயதில் ரஹ்மான் இசையை விரும்பி கேட்கும் இளைஞர்கள் முப்பது வயதிற்க்கு மேல் இளையராஜாவை விரும்புவார்கள். இதற்கு காரணம் காமத்தை முடித்துவிட்டு கடவுளுக்கு ஆத்மா பயணப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் ஆன்மீக விசயங்களின் நாட்டம் அதிகம் ஏற்படும்.தியானமும் எளிதில் வசப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment