Followers

Monday, December 15, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் மக்கள் ஒரு விசயத்தை பின்பற்றுகிறோம் என்று தெரிந்தால் அதனை உடனே எடுத்து தொழிற் செய்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க தொடங்கிவிடுவார்கள்.

நகரத்தில் கட்டிடம் கட்டும் அனைத்து பில்டர்களும் வாஸ்துவை முறையாக பயன்படுத்தி தான் கட்டடத்தை கட்டி விற்பனை செய்கின்றனர். இந்து மக்கள் மட்டும் வாஸ்துவை பின்பற்றுவார்கள் என்பது கிடையாது. அனைத்து மக்களும் வாஸ்துவை பின்பற்றி தான் குடி அமர்கின்றனர்.

நிறைய வீடுகள் வாஸ்துபடி வீடு கட்டி அதில் குடியிருந்தாலும் மக்களுக்கு பிரச்சினை மட்டும் தீர்ந்தபாடு இல்லை. ஏதாவது ஒரு பிரச்சினை மனதில் வந்துக்கொண்டே இருக்கின்றது. சக்தியை இழந்தவர்களுக்கு தான் பிரச்சினை மேல் பிரச்சினை வரும்.

ஒரு வீட்டில் நீங்கள் குடியிருந்தால் அந்த வீடு உங்களுக்கு சக்தியை கொடுக்ககூடிய வீடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் உங்களின் வாழ்க்கை செல்லும். 



சக்தி எப்படி வீடு கொடுக்கும் என்று கேட்கிறீர்களா?

பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியை வீட்டில் அப்படியே நிலைநிறுத்த வேண்டும். நமது கோவில்கள் எல்லாம் பிரபஞ்சத்தில் இருந்து வரும் சக்தியை அப்படி உள்வாங்கிக்கொண்டு நாம் வணங்கும்பொழுது நமக்கு கொடுக்கும்படி அமைத்து இருக்கின்றனர். அதனை போல் நமது வீடும் பிரபஞ்ச சக்தியை நமக்கு கொடுத்தால் நாம் கோவிலுக்கு கூட செல்லவேண்டியதில்லை.மிகுந்த சக்தி படைத்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: