வணக்கம் நண்பர்களே!
ஒரு வீடு கட்டவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதன் பிறகு அந்த வீட்டை துவங்கினால் அதன் பிறகு தான் வீடு எந்தளவுக்கு பிரச்சினையை கொடுக்கும் என்பது தெரியும்.
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார் என்று சொல்லுவார்கள். இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இரண்டும் வாழ்க்கையை திருப்பிபோடும் சக்தி வாய்ந்தவை.
ஒரு வீடு கட்ட ஆரம்பித்தால் ஒரு சிலருக்கு உடனே அது நடந்துவிடும். ஒரு சிலருக்கு அது பிரச்சினையை கொடுத்துவிடும். ஒரு சில வீடுகள் அதன் உரிமையாளரை உயிரையே பறித்துவிடும் தன்மையும் வாய்ந்தவையாக இருக்கும்.
பல பேரை நான் பார்த்து இருக்கிறேன். வீடு பாதி தான் முடித்து இருப்பார். வீட்டை கட்டியவர் ஏதாவது ஒரு விதத்தில் அவர் இறந்து இருப்பார். வாஸ்து மட்டும் காரணம் இல்லை. அதனை தாண்டி பல விசயங்களை நாம் பார்க்கவேண்டும். அப்பொழுது தான் அதன் உண்மை என்ன என்று ஆராயமுடியும்.
முதலில் உங்களின் ஜாதகத்தில் வீடு கட்டுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அதன் பிறகு அந்த வீடு அமையும் நிலத்தை பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால் தான் உண்மையான நிலை என்று தெரிந்துக்கொள்ளமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Adutha padhivu kalyaanam pannuradha pathi podunga.
Post a Comment