வணக்கம் நண்பர்களே!
வீட்டைப்பற்றி எழுதிய கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பல நண்பர்கள் தங்களின் வீடுகளுக்கு நீங்கள் வாருங்கள் என்று கூப்பிட்டு உள்ளனர். கருத்தை ஏற்று என்னை அழைத்தற்க்கு நன்றி.
நமது மக்கள் வார்த்தையில் கூட வறுமையை காட்டுபவர்களாக இருக்கின்றனர். ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் அவர்கள் சொல்லுவது பங்களா மாதிரி கட்டவேண்டும் என்கின்றனர். அது என்ன பங்களா மாதிரி கட்டவேண்டும். பங்களா கட்டபோகிறேன் என்று சொல்லவேண்டியது தானே. அதில் கூட மாதிரி என்ற வார்த்தையை உபயோகித்து தன்னுடைய வார்த்தையில் கூட நல்ல வாழ்வதாக தெரியவில்லை.
பங்களா கட்டவேண்டும் என்று ஆசைப்படுங்கள். பங்காள மாதிரி கட்டபோகிறேன் என்று ஆசைப்பட்டால் கூரை வீடு கூட கட்டமுடியாது. வார்த்தைகளை தவறாக பயன்படுத்தி பயன்படுத்தி அவனின் வறுமைக்கு அவனே காரணமாகிவிடுகிறான்.
உங்களிடம் எல்லாம் நான் சொல்லுவது வீடு என்பது நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் அந்தஸ்தை காட்டுகின்ற ஒரு விசயம். நீங்கள் பேங்கில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கலாம். அதனை எல்லாம் மக்கள் பார்க்கமாட்டார்கள். நீங்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்கின்றீர்கள் என்பதை தான் இந்த உலகம் பார்க்கும்.
இந்த பூமியில் நீங்கள் செய்கின்ற அதிகப்பட்ச ஒரு செயல் எது என்றால் நீங்கள் கட்டுகிற வீடு மட்டும் தான். வேறு எதுவும் அதிகம் இருக்காது. அப்படி நீங்கள் கட்டுகிற வீடு மிகவும் சொசுசான வீடாக அதே நேரத்தில் நல்ல சக்தியை கொடுக்கின்ற வீடாக நீங்கள் அமைத்துக்கொண்டால் அதன் பிறகு உங்களுக்கு எல்லாம் தேடி வந்துவிடும்.
இன்றைய நாளில் இருந்து நல்ல சொகுசான வீடு கட்டி அதில் நான் வாழவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை வையுங்கள். ஒரு வருடத்தில் அதனை நீங்கள் நிறைவேற்றிவிடமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment