Followers

Friday, December 5, 2014

ஆன்மீக அனுபவங்கள் 173


வணக்கம் நண்பர்களே!
                      நீங்கள் ஏதாவது ஒரு வேலையை பிறர் வழியாக செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையை எக்காரணம் கொண்டும் சாமியாரை பின்தொடர்ந்து செல்பவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள். 

சாமியாரை பின்தொடர்ந்து செல்பவன் அவ்வளவு எளிதில் அந்த வேலையை செய்ய மாட்டான். இங்குள்ள சாமியார்கள் மனிதர்களை அப்படியே ஒரு வித மயக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். அந்த மயக்கம் தெளிய கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இவர்களும் அந்த மயக்கத்திலேயே இருப்பார்கள். உங்களின் வேலை நடைபெறாது. சுறுசுறுப்பே இல்லாமல் அப்படியே இருப்பார்கள். ஆன்மீகம் என்பது உங்களை தூண்டும் ஒரு கருவியாக இருக்கவேண்டும் மாறாக மந்த நிலையை போதிக்கும் கருவியாக கற்பிக்கிறார்கள்.

எந்த ஒரு செயலையும் அது நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்க எல்லாம் இது காலம் கிடையாது. வேலை உங்களுக்கு வருகிறது என்றால் அதனை செய்து பார்த்துவிடுங்கள். கெட்டதில் முடிந்தால் அது ஒரு பாடத்தையாவது கற்பித்துக்கொடுத்துவிட்டு செல்லும்.

மந்தநிலை என்பது உங்களை வீழ்த்தும் ஒரு பேய். அதனை விரட்ட தான் ஆன்மீகபயிற்சி. ஆன்மீகத்தில் இருந்துக்கொண்டு மந்தநிலையில் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். அதனால் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்தால் சுறுசுறுப்போடு உங்களின் உடலும் மனமும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருந்தால் நீங்கள் செல்லும் ஆன்மீகம் சரியான ஒரு ஆன்மீகம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: